லைசன்ஸ், ஆர்டிஓ தேவையில்லை.. குறைந்த விலையில் கிடைக்கும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Published : Feb 16, 2026, 03:27 PM IST

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்டிஓ பதிவு தேவையில்லாத குறைந்த வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமடைந்து வருகின்றன. குறைந்த விலை, பராமரிப்பு செலவுகள் காரணமாக, இவை மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.

PREV
15
லைசன்ஸ் தேவையில்லாத ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, லைசன்ஸ் மற்றும் ஆர்டிஓ பதிவு தேவையில்லாத லோ-ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவை 25 கிமீ/மணி வேக வரம்புக்குள் இருப்பதால் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை.

25
ஆர்டிஓ பதிவு தேவையில்லா ஸ்கூட்டர்கள்

முதலில், ஜாய் இ-பைக் குளோப் மாடல் சுமார் ரூ.70,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. 1.44 kWh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 60 கிமீ வரை செல்லும் என நிறுவனம் கூறுகிறது. ரிவர்ஸ் மோடு, டிஜிட்டல் டிஸ்ப்ளே, எல்இடி லைட்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன.

35
பதிவு இல்லாமல் ஓட்டலாம்

ஆம்பியர் ரியோ லி மாடல் இரண்டு வகைகளில் வருகிறது. 1.3 kWh மற்றும் 1.44 kWh பேட்டரி விருப்பங்களுடன் 70-80 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. இரண்டும் 25 கிமீ/மணி அதிகபட்ச வேகத்துடன் செயல்படுகின்றன. விலை சுமார் ரூ.59,000 முதல் தொடங்குகிறது.

45
லைசன்ஸ் தேவையில்லை

அதேபோல Okaya Freedom மற்றும் Evolet Derby போன்ற மாடல்களும் 70-90 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றன. பாதுகாப்பு அம்சங்கள், கீலெஸ் லாக், LED லைட்ஸ் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. Okinawa Lite மாடலும் 60 கிமீ ரேஞ்சுடன் கிடைக்கிறது.

55
குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்கள்

குறைந்த விலை, எளிய பராமரிப்பு, பெட்ரோல் செலவு இல்லாமை போன்ற காரணங்களால் இம்மாதிரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நகரப் பயணங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். பார்க்கப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories