Fortuner: புதிய அவதாரம் எடுக்கும் ஃபார்ச்சூனர்; அடேங்கப்பா இம்புட்டு வசதிகளா?

Published : Jul 20, 2026, 11:02 AM IST

Toyota Fortuner : டொயோட்டாவின் அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர், முற்றிலும் புதிய டிசைன் மற்றும் பிரீமியம் இன்டீரியர் வசதிகளுடன் வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Next-gen Toyota Fortuner

இந்தியாவில் எஸ்யூவி சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் விரைவில் புதிய தலைமுறை மாடலாக அறிமுகமாகும் என்ற தகவல்கள் ஆட்டோமொபைல் உலகில் அதிக கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, அடுத்த தலைமுறை Toyota Hilux பிக்கப் டிரக்கில் இடம்பெறவுள்ள மாற்றங்கள், புதிய ஃபார்ச்சூனரிலும் இடம்பெறலாம் என வெளிநாட்டு ஆட்டோமொபைல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த இரு வாகனங்களும் ஒரே IMV (Innovative International Multi-purpose Vehicle) தளத்தை பகிர்ந்து கொள்வதால், பல அம்சங்களில் ஒற்றுமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
மாடர்ன் தோற்றத்தில் புதிய ஃபார்ச்சூனர்

வெளியான தகவல்களின்படி, அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் தற்போதைய மாடலை விட கூர்மையான மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் வரக்கூடும். புதிய ஹனிகோம் வடிவ முன்பக்க கிரில், மெலிதான LED ஹெட்லேம்ப்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட LED டே டைம் ரன்னிங் லைட்கள் ஆகியவை காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றும் என கூறப்படுகிறது.

சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்பை புகைப்படங்கள், காரின் பின்புறத்திலும் பல மாற்றங்கள் வர இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. புதிய டெயில்கேட் வடிவமைப்பு, மெலிதான LED டெயில் லேம்ப்கள் மற்றும் அவற்றை இணைக்கும் முழு அகல லைட் பார் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம். இருப்பினும், வாகனத்தின் மொத்த அளவில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

34
கேபினில் அதிக பிரீமியம் வசதிகள்

உட்புறத்திலும் பல புதிய அப்டேட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம்.

இதனுடன், Toyota Safety Sense அடிப்படையிலான ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் மற்றும் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட பல நவீன அம்சங்களும் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
இன்ஜினில் பெரிய மாற்றம் இருக்காது?

பவர்டிரெயின் பிரிவில் பெரிய மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள 2.7 லிட்டர் பெட்ரோல், 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.8 லிட்டர் நியோ டிரைவ் மைல்டு ஹைப்ரிட் டீசல் இன்ஜின்கள் புதிய மாடலிலும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படலாம். குறிப்பிட்ட வேரியன்ட்களில் 4WD (Four-Wheel Drive) வசதியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

புதிய தலைமுறை Hilux மற்றும் Fortuner மாடல்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. எனினும், இந்த மாடல்களின் அறிமுக தேதி, டிசைன் அல்லது தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து டொயோட்டா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் ஸ்பை புகைப்படங்கள் மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல் ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த விவரங்கள் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகவே பார்க்கப்படுகின்றன

Read more Photos on
click me!

Recommended Stories