மைலேஜிலும் கிங், விலையிலும் கெத்து: 6 ஏர்பேக்குகளுடன் ரூ. 5 லட்சத்திற்குள் களமிறக்கிய டாடா கார்!

Published : Oct 13, 2026, 12:38 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல டாடா டியாகோ காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள், என்ஜின் செயல்திறன் பற்றி பார்போம்.

PREV
15
டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன், நாம் எதிர்பார்ப்பதைவிட பல அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. புதிய அப்கிரேட்கள் மூலம் இந்த கார் எந்த அளவிற்கு மேம்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக நடத்தப்பட்ட டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை பற்றி விரிவாக பார்போம்.

டியாகோவின் வெளிப்புற தோற்றம் முன்பை விட கூர்மையானதாக மாற்றப்பட்டுள்ளது. காரின் முன்பகுதி ஷார்ப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஹெட்லைட்களின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க க்ரில் முன்பை விட மெல்லியதான வடிவத்தில் சற்று மேல்நோக்கிப் பொருத்தப்பட்டுள்ளதுடன், பெரிய அளவிலான ஏர் டேம் உடன் புதிய பம்பர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம் 170 மிமீ ஆக உள்ளது. பக்கவாட்டில் புதிய டிசைனிலான 15-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் புத்துணர்ச்சியான கருப்பு நிற வீல் ஆர்ச் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன; மேலும் மேற்கூரையின் பின்புக்கத்தில் ஸ்பாய்லர் மற்றும் தெளிவான பம்பர் டிசைன் இடம்பெற்றுள்ளது. டேடோனா கிரே, பாங்காங் பல்ஸ் மற்றும் வாரணாசி வைப்ரன்ஸ் உள்பட 6 புதிய கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

25
உட்புற வசதிகள் & தொழில்நுட்பம்

காருக்குள் முன்பை விட தட்டையான டாஷ்போர்டு மற்றும் மெல்லியதான லே-அவுட் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான இன்ஸ்ட்ரூமெண்ட் பைனகிள் மாற்றப்பட்டு, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஏஎம்டி வேரியண்ட்களில் வழக்கமான லிவருக்கு பதிலாக புதிய சுழற்றக்கூடிய கியர் செலெக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி வெண்ட்ஸ், கூல்டு க்ளோவ்பாக்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

35
பாதுகாப்பு அம்சங்கள்

பயணிகளின் பாதுகாப்பிற்காக பின்வரும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், 360-டிகிரி கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கைக்கான ஹேங்கர்கள், காரின் உடலமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், முன் இருக்கை பயணிகளுக்கு கால் தொடைக்கான கூடுதல் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

45
என்ஜின் & செயல்திறன்

புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 86 எச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிஎன்ஜி வெர்சனில் 75.5 எச்பி மற்றும் 96 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் உடன் பெறலாம். CNG AMT காரில் இந்தியாவில் முதன்முறையாக பெடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிரைவர் கியர்களை மேனுவலாகக் கட்டுப்படுத்த முடியும்.

55
டிரைவிங் அனுபவம் எப்படி உள்ளது?

CNG பவர்டிரெயின் நேர்த்தியாகவும் எந்தவொரு அவசரமில்லாமலும் இயங்குகிறது, ஆற்றல் விநியோகம் சீராகக் கிடைக்கிறது. எனினும் மிட்-ரேஞ்சில் ஆற்றல் கிடைப்பதில் சிறிய சரிவும், திடீரென அதிக ஆற்றல் தேவைப்படும்போது சிறிய தடுமாற்றமும் ஏற்படுகிறது. AMT கியர்பாக்ஸ் கியர்களை மாற்றுவதில் சற்று மெதுவாகச் செயல்படுகிறது, இருப்பினும் கியர்களைக் குறைப்பதையும் நிறுத்தி வைப்பதையும் விரைவாகச் செய்கிறது. பெடில் ஷிஃப்டர்கள் மேனுவல் மாற்றத்திற்கு உதவினாலும் ஒட்டுமொத்த ரெஸ்பான்ஸ் மெதுவாகவே உள்ளது.

சஸ்பென்ஷன் செட்-அப்பில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், சவுகரியமான பயணத்திற்காக சிறிது ட்யூன் செய்யப்பட்டுள்ளது; இருப்பினும் மென்மையான சஸ்பென்ஷன் காரணமாக வளைவுகளில் குலுக்கல்கள் ஏற்படுகின்றன. ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் சீராகவும் இலகுவாகவும் உள்ளதுடன், முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக்குகள் போதுமான பிரேக்கிங் திறனை வழங்குகின்றன.

புதிய மேம்பாடுகளுடன் நவீன தோற்றத்தில் வந்துள்ள 2026 டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட், முதல் கார் வாங்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். AMT கியர்பாக்ஸில் சில குறைபாடுகள் இருப்பினும், குறைந்த எரிபொருள் செலவில் இயக்க விரும்புவோருக்கு CNG AMT மாடல் புத்திசாலித்தனமான தேர்வாக இருப்பதோடு, இதில் உள்ள பெடில் ஷிஃப்டர்கள் டிரைவிங்கில் உற்சாகத்தைத் தருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories