2026-ல் இந்தியாவிற்குத் திரும்பும் புதிய ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நேரடிப் போட்டியாக அமைகிறது. இந்த காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் கிரெட்டாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் 2026 ரெனால்ட் டஸ்டர் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகமான இந்த புதிய தலைமுறை டஸ்டர், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சந்தைக்கு திரும்புகிறது. 2026 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த மாடல், மீண்டும் ரெனால்ட் பிராண்டை எஸ்யூவி போட்டியில் முன்வரிசையில் வரும் என நம்பப்படுகிறது.
25
2026 ரெனால்ட் டஸ்டர்
ஆனால், இந்தப் பயணம் டஸ்டருக்கு எளிதானதாக இருக்காது. ஏனெனில் இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான ஹூண்டாய் கிரெட்டாவுடன் நேரடி போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. கிரெட்டா ஏற்கனவே குடும்ப வாடிக்கையாளர்கள் மத்தியில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது, புதிய டஸ்டர் அதை சவால் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், இந்த இரண்டு எஸ்யூவிகளின் அளவுகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
35
ஹூண்டாய் க்ரெட்டா போட்டி
அளவுகளைப் பார்க்கும்போது, 2026 ரெனால்ட் டஸ்டர், கிரெட்டாவை விட சற்று பெரியதாக உள்ளது. நீளம், அகலம், உயரம் மூன்றிலும் டஸ்டர் முன்னிலையில் உள்ளது. கூடுதலாக, அதிக வீல்பேஸ் காரணமாக பயணிகளுக்கு மேம்பட்ட கால்வசதி கிடைக்கும். பூட் ஸ்பேஸிலும் டஸ்டர் மேலாதிக்கம் செலுத்துகிறது. இது நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
எஞ்சின் விருப்பங்களில் டஸ்டர் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்துகிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கிரெட்டாவில் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. டஸ்டரில் டீசல் விருப்பம் இல்லாதது சிலருக்கு குறையாக இருக்கலாம்.
55
ஹூண்டாய் கிரெட்டா விலை
விலை விவரங்களைப் பார்க்கும்போது, 2026 ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை ஆரம்ப விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹூண்டாய் கிரெட்டா ரூ.10.79 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கும் மேல் வரை விற்பனையில் உள்ளது. விலை, அளவு மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு, 2026 டஸ்டர் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.