மாருதியின் புதிய 7 சீட்டர் கார் வருது.. XUV700, Safariக்கு புதிய போட்டியா?

Published : May 31, 2026, 05:26 PM IST

மாருதி சுசுகி இந்திய சந்தைக்காக புதிய 7 சீட்டர் எஸ்யூவி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த மாடல், ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

PREV
15
மாருதியின் அடுத்த பெரிய சர்ப்ரைஸ்

இந்திய எஸ்யூவி சந்தையில் போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், மாருதி சுசுகி தனது அடுத்த பெரிய திட்டத்தில் தீவிரமாக வருகிறது. Y17 என்ற கோட் நேமில் உருவாகும் புதிய 3-வரிசை எஸ்யூவி, குடும்ப பயனாளிகளை குறிவைத்து உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாடலின் தயாரிப்பு ஹரியானாவில் உள்ள கர்கோடா தொழிற்சாலையில் நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25
கிராண்ட் விட்டாரா

இந்த புதிய எஸ்யூவி, மாருதியின் பிரபலமான கிராண்ட் விட்டாராவைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்காக நீளமான வீல்பேஸ் மற்றும் தனித்துவமான டிசைன் அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய LED டிசைன், மாற்றப்பட்ட முன்புற தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் கேரக்டர் மூலம், 5 சீட்டர் மாடலில் இதை வேறுபடுத்தும் முயற்சி இருக்கலாம்.

35
ஹைப்ரிட் வசதிகள்

பவர்ட்ரெயின் அம்சங்களில், மாருதி தனது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை இந்த எஸ்யூவி-யிலும் தொடர வாய்ப்புள்ளது. 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் அமைப்பு இடம்பெறும் என ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயில்டு ஹைப்ரிட் வேரியண்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களும், சில உயர்நிலை மாடல்களில் AWD வசதியும் இடம்பெறலாம்.

45
புதிய மாருதி எஸ்யூவி

ஸ்ட்ராங் ஹைப்ரிட் அமைப்பு அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவை விரும்பும் வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், 7 சீட்டர் எஸ்யூவி கூடுதல் எடை காரணமாக மைலேஜ் புள்ளிவிவரங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
கிராண்ட் விட்டாரா

விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய மாருதி எஸ்யூவி சுமார் ரூ.14 லட்சம் முதல், உயர்நிலை வேரியண்ட்களில் ரூ.25 லட்சத்தை தாண்டக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. Mahindra XUV700, Tata Safari மற்றும் வரவிருக்கும் புதிய எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அதிகம்.

Read more Photos on
click me!

Recommended Stories