எம்ஜி காமெட் EVயின் சிறப்பம்சங்கள்
எக்சிகியூட்டிவ், எக்சைட், எக்ஸ்க்ளூசிவ், 100 ஆண்டு பதிப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் காமெட் EV வருகிறது. வூலிங் ஏர் EV போன்றது இதன் வடிவமைப்பு. எம்ஜி காமெட் EV GSEV தளத்தை அடிப்படையாகக் கொண்டது. நகர பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 145/70 டயர் அளவு கொண்ட 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகள் கிடைக்கின்றன.
காமெட் EVயின் நீளம் 2974 மிமீ, அகலம் 1505 மிமீ, உயரம் 1640 மிமீ. 2010 மிமீ இதன் வீல்பேஸ். திருப்பு ஆரம் வெறும் 4.2 மீட்டர், இது போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வாகனம் ஓட்டுவதையோ அல்லது குறுகிய இடங்களில் நிறுத்துவதையோ எளிதாக்குகிறது. எம்ஜி காமெட் EV மூடப்பட்ட முன்புற கிரில், முழு அகல LED ஸ்ட்ரிப், ஸ்லீக் ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. பெரிய கதவுகள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள் மற்றும் தட்டையான பின்புறமும் இதில் உள்ளன.