அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஹைப்ரிட் ஸ்விஃப்ட் 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காரில் ஸ்போர்ட்டி இருக்கைகளையும் காணலாம். இதில் 5 பேர் அமரும் இடம் இருக்கும்.
இந்த காரில் பின்பக்க பயணிகளுக்கு ஏசி வென்ட் வசதி இருக்கும், தற்போதைய ஸ்விஃப்ட்டின் விலை ரூ.6.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ஹைப்ரிட் ஸ்விஃப்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம்.