கையில ரூ.11000 ஆயிரம் இருந்தா போதும்.! Maruti Suzuki Victoris SUV உங்க வீட்டுக்கு வரும்.!

Published : Sep 03, 2025, 04:47 PM IST

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரெட்டா உள்ளிட்ட பிரீமியம் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாகக் களமிறங்கியுள்ள இந்தக் கார், மலிவு விலையில் கிடைக்கிறது.

PREV
16
மாருதி இந்தியாவில் முதலிடம்

குறைந்த விலை, குறைந்த பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாருதி சுஸுகி கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. அதிக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி கார்களே முதலிடத்தில் உள்ளன. தற்போது மாருதி சுஸுகி மற்றொரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரீமியம் எஸ்யூவி காரை விரும்புவோருக்காக புதிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

26
அப்பாடி இவ்ளே பெரிய காரா?!

மாருதி சுஸுகி விக்டோரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாருதி பிரெஸ்ஸா காரை விடப் பெரியது, மாருதி கிராண்ட் விட்டாரா காரை விடச் சிறியது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல பிரீமியம் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாளராக உள்ளது.

36
ரூ.11 ஆயிரம் இருந்தா போதும் நீங்க கார் ஓனர்

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் முன்பதிவு விலை ரூ.11,000. மாருதி சுஸுகி அங்கீகரிக்கப்பட்ட டீலர் மற்றும் ஆன்லைன் மூலம் காரை முன்பதிவு செய்யலாம். மலிவு விலையில் கார்களை வழங்கும் மாருதி சுஸுகி, தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

46
பார்த்தாலே பரவசம் தரும் மாருதி விக்டோரிஸ்

மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் இரண்டு எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் கார் கிடைக்கிறது. சிஎன்ஜி வேரியண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் அல்லது சிவிடி விருப்பத்தில் கிடைக்கிறது.

56
பாதுகாப்பு அம்சங்களும் சூப்பர்

விக்டோரிஸ் காரில் லெவல் 2 ADAS சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் மற்றும் அரசு கட்டாயமாக்கிய பிற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் கார் பாரத் NCAP 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதன் மூலம், 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுஸுகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி டிசையர் கார் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.

66
செம சூட்டு வெரி குயுட்டு

மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன. 360 டிகிரி கேமரா, 60க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories