அதிக மைலேஜ் தரும் புதிய காரை அறிமுகம் செய்த மாருதி.. விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Sep 14, 2024, 10:28 AM IST

Maruti Suzuki Swift CNG: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி எடிஷன் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்விஃப்ட்டின் CNG பதிப்பு 3 வேரியண்ட்களில் பெட்ரோல் மாடலை விட ரூ.90,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ. 8.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Maruti Suzuki Swift CNG

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி எடிஷன் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்விஃப்ட்டின் CNG பதிப்பு VXi, VXi(O) மற்றும் ZXi என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மாடலை விட ரூ.90,000 கூடுதல் விலையில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 8.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதிக மைலேஜ் தரும் இந்த சிஎன்ஜி எடிஷனில் பிரத்யேகமாக எந்த அப்டேட்டும் இல்லை.

ஸ்விஃப்ட் சிஎன்ஜி புதிய Z12E பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.85 கிமீ (ஏஆர்ஏஐ மதிப்பீடு) மைலேஜை வழங்குகிறது. 1.2 லிட்டர் கே-சீரிஸ் எஞ்சின் கொண்ட முந்தைய ஸ்விஃப்ட் எடிஷனை விட இதன் மைலேஜ் 6 சதவீதம் அதிகம். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

Maruti Suzuki Swift CNG Price

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியில் உள்ள புதிய Z12E இன்ஜின் 69.75 பிஎச்பி பவரையும், 101.8 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. சிஎன்ஜி கார் பெட்ரோல் காரை விட சற்று குறைவான சக்தியை உற்பத்தி செய்கிறது என்றாலும், சற்று அதிக முறுக்குவிசையை உருவாக்குகிறது.

6 ஏர்பேக்குகள், ESP, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஆலசன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 14-இன்ச் ஸ்டீல் வீல்கள், பவர் ஜன்னல்கள் போன்ற அம்சங்கள் VXi வேரியண்டில் உள்ளது. மிட்-லெவல் VXi (O) ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், உயரத்தை அட்ஜஸ்டு செய்யக்கூடிய டிரைவர் சீட், ஸ்டீயரிங் கன்ட்ரோல்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Tap to resize

Maruti Suzuki Swift CNG Mileage

டாப்-வேரியண்ட் ZXi DRLகள், 15-இன்ச் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் வாஷர் வைப்பர் உடன் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களைப் பெறுகிறது.

இந்த ஸ்விஃப்ட் சிஎன்ஜி சிங்கிள் சிலிண்டருடன் வருகிறது. தற்போது டாடா மற்றும் ஹூண்டாய் மாடல்களில் காணப்படும் இரட்டை சிலிண்டர் அமைப்பை இது வழங்கவில்லை. அதனால் பூட் ஸ்பேஸ் குறைகிறது. முந்தைய மாடலை விட கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் ஆறு சதவீதம் குறைவாக இருக்கும் மாருதி கூறுகிறது.

Maruti Suzuki Swift CNG Specs

இந்த புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜிக்கான டெலிவரி இந்த வாரம் குஜராத்தில் தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போன்ற பிற மாநிலங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான கார்களில் மாருதி சுஸுகி சிஎன்ஜியும் ஒன்று. மாருதி சுஸுகி ஆண்டுக்கு ஆறு லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Maruti Suzuki Swift CNG features

கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 4.77 லட்சம் சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியுள்ளன மாருதி சுஸுகி கூறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 2.21 லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த புதிய சிஎன்ஜி கார் மூலம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என மாருதி எதிர்பார்க்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சிஎன்ஜி கார்களின் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாகவும் மாருதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சிஎன்ஜி வாகனச் சந்தையில் மாருதி சுஸுகி தொடர்ந்து முன்னணியில் நீடிக்கிறது.

Latest Videos

click me!