What is Boot Space?
கார் வாங்கிய பிறகு, பலர் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். நீண்ட தூரம் பயணிக்கும்போது கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கும். பொருட்களை பத்திரமாக வைக்கும் அளவுக்கு இடமும் அதிகமாக தேவைப்படும். இதற்காகவே புதிய கார் வாங்கும்போது பூட் ஸ்பேஸ் எவ்வளவு என்று பார்க்கிறார்கள்.
அதிக பூட் ஸ்பேஸ் உள்ள கார்களில் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறார்கள். பூட் ஸ்பேஸ் குறைவாக இருந்தால், லக்கேஜ்களைக் குறைவாகவே எடுத்துச் செல்ல முடியும் என்ற என்ற கருத்தும் பலரிடையே உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி கார்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை குறைந்த பூட் ஸ்பேஸ்.
How to use Boot Space?
சிஎன்ஜி கார்களில், சிஎன்ஜி சிலிண்டர் காரின் பூட் ஸ்பேஸ் பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு பொருட்களை சேமித்து வைக்க போதுமான இடம் இல்லை. இதன் காரணமாக அந்தந்த கார்களில் பூட் ஸ்பேஸ் குறைவாக உள்ளது. ஆனால் காரின் பின்பகுதியை திறம்பட பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால், குறைந்த இடத்தில் அதிக லக்கேஜை எடுத்துச் செல்லலாம்.
ஒரு காரின் பூட் ஸ்பேஸ் கொள்ளளவை கார் தயாரிப்பாளர்கள் லிட்டர்களில் குறிப்பிடுகிறார்கள். 400 லிட்டர்கள், 450 லிட்டர்கள், 500 லிட்டர்கள் என வெவ்வெஏறு அளவுகளில் பூட் ஸ்பேஸ் இருக்க்கும். சில கார்களில் 600 லிட்டர்கள் அளவுக்கும் பூட் ஸ்பேஸ் இருக்கும்.
Boot Space in Cars
பூட் ஸ்பேஸ் கொள்ளளவு எத்தனை லிட்டர் என்பதை வைத்து வாகனத்தில் எவ்வளவு சாமான்களை எடுத்துச் செல்ல முடியும் என்று கணக்கலாம். காரின் பூட் ஸ்பேஸில் லக்கேஜை வைக்கும்போது, பின் கதவு கண்ணாடியின் கீழ் உயரம் வரை அல்லது பின் இருக்கையின் உயரம் வரை லக்கேஜை நிரப்பலாம்.
இந்த உயரத்திற்கு மேல் காரில் லக்கேஜை நிரப்பக் கூடாது. அவ்வாறு அடைத்து வைக்கும்போது பின்புறக் கண்ணாடி மூலம் கிடைக்கும் வியூ சரியாக இருக்காது. இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் லக்கேஜ் இருக்கைக்கு மேல் அல்லது பின்புற கண்ணாடியைவிட உயரமாக இருக்கக் கூடாது.
Boot Space for luggage
லக்கேஜை பின் இருக்கைகளுக்கு பின்னால் வைப்பது ரியர் வியூ கண்ணாடியை மறைப்பது மட்டுமின்றி, கார் வேகமாகச் செல்லும்போது பொருட்கள் இருக்கையில் விழுந்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும். இதைத் தவிர்க்கவும் லக்கேஜ்களை அளவுக்கு அதிகமாகத் தணிக்கக் கூடாது என்று வாகன உற்பத்தியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். பலருக்கு இதைப்பற்றி சரியான புரிதல் இல்லை.
எனவே, காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, லக்கேஜை காரின் பூட் ஸ்பேஸில் மட்டுமே வைக்க வேண்டும். எவ்வளவு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மேல் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிக லக்கேஜ் ஏற்றிச் செல்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.