Maruti Car Offers: மாருதி கார்களுக்கு ரூ.2.15 லட்சம் தள்ளுபடி! ஜூன் மாத மெகா ஆஃபர்! முழு விபரம்!

Published : Jun 06, 2026, 01:02 PM IST

Maruti Car Offers: மாருதி சுஸுகி நிறுவனம் ஜூன் மாதத்தில் தங்களது கார்களுக்கு ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல்களின் விலை குறையும்? என்பது குறித்து பார்ப்போம். 

PREV
14
மாருதி கார்களுக்கு மெகா ஆஃபர்

புதுசா கார் வாங்க பிளான் பண்றீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஜூன் மாசத்தில் வாடிக்கையாளர்களுக்கு கலக்கலான ஆஃபர்களை அறிவித்துள்ளது. Nexa மற்றும் Arena கார்களுக்கு ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் பலன்கள், கார்ப்பரேட் ஆஃபர்கள் என்று பல சலுகைகள் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை உள்ளது.

நெக்சான் மாடல் கார்கள்

Nexa-வின் பிரீமியம் MPV காரான இன்விக்டோவுக்கு ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்குது. SUV-யான கிராண்ட் விட்டாராவின் சிக்மா பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.1.35 லட்சமும், டெல்டா பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.1.25 லட்சமும் தள்ளுபடி உள்ளது. ஜீட்டா, ஆல்ஃபா வேரியண்ட்களுக்கு ரூ.85,000 தள்ளுபடியோடு, 5 வருஷ எக்ஸ்டெண்டட் வாரண்டியும் கொடுக்கிறார்கள். டெல்லியில கிராண்ட் விட்டாரா ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாங்கினால் ரூ.1.85 லட்சம் வரை ஜீரோ ரோட் டேக்ஸ் பெனிஃபிட், கூடவே ரூ.90,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

24
மாருதி பலேனோ

Nexa-வின் பாப்புலர் காரான பலேனோ பெட்ரோல், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு ரூ.40,000, CNG வேரியண்ட்டுக்கு ரூ.35,000 தள்ளுபடி உள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்ட இக்னிஸ் மாடலுக்கு, டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்கை பொறுத்து ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை தள்ளுபடி வழங்குகிறார்கள். ஸ்டைலான SUV ஃபிரான்க்ஸ் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.25,000, சாதாரண பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட்களுக்கு ரூ.15,000 தள்ளுபடி உள்ளது. லைஃப்ஸ்டைல் SUV ஜிம்னி, XL6 மாடல்களுக்கு எல்லா வேரியண்ட்களிலும் ரூ.45,000 வரை தள்ளுபடி வாங்கலாம்.

ரூ.60,000 வரை தள்ளுபடி

Arena நெட்வொர்க் கார்களைப் பார்த்தால் ஃபிளாக்‌ஷிப் மாடல் விக்டோரிஸ் (Victoris) மேல அதிகபட்ச ஆஃபர்கள் இருக்கிறது. விக்டோரிஸ் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலுக்கு ரூ.90,000, CNG வேரியண்ட்டுக்கு ரூ.80,000, பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. விரைவில் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வரவிருக்கும் பிரெஸ்ஸா காம்பாக்ட் SUV-யின் பெட்ரோல், CNG மாடல்கள் எல்லாத்துக்கும் ரூ.55,000 வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள்.

34
மாருதி ஆல்டோ

நடுத்தர குடும்பங்கள் அதிகம் விரும்பும் பட்ஜெட் கார்களுக்கும் மாருதி சுஸுகி ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது. ஆல்டோ K10: LXi வேரியண்ட்டுக்கு ரூ.52,500, மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.42,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. வேகன்ஆர்: ரொம்ப பாப்புலரான இந்த டால்‌பாய் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.52,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்விஃப்ட்: புதிய ஸ்விஃப்ட் மாடலின் மேனுவல், CNG வேரியண்ட்களுக்கு ரூ.40,000, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுக்கு ரூ.45,000 வரை சலுகைகள் உள்ளது. S-பிரெஸ்ஸோ, செலிரியோ: பெட்ரோல், CNG என இரண்டு மாடல்களுக்கும் ரூ.37,500 வரை தள்ளுபடி வழங்குகிறார்கள்.

44
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...

இந்த விலைகளும், ஆஃபர்களும் நீங்க இருக்கும் ஊர், நீங்கள் தேர்ந்தெடுக்கிற வேரியண்ட், ஸ்டாக் இருப்பைப் பொறுத்து மாறலாம். ஆகையால் கார் புக் பண்றதுக்கு முன்பு உங்கள் பக்கத்தில் இருக்கும் மாருதி சுஸுகி அல்லது Nexa டீலர்கிட்ட பேசி முழு விவரத்தையும் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. இப்போது மாருதி Arena கார்களின் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சமாகவும், Nexa கார்களின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.20.01 லட்சம் வரையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories