Hero Flex Fuel Bike: ரூ.72,792 விலையில் தொடங்கும் இந்த புதிய பைக்குகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? இந்திய ஆட்டோ துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கக்கூடிய அம்சம் இதில் மறைந்துள்ளது.
இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முக்கிய முயற்சியை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொண்டுள்ளது. நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் (Flex-Fuel) தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் சைக்கிள்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
25
ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் பைக்கின் விலை
இந்த புதிய வரிசையில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் மாடல் மற்றும் ஹீரோ ஹெச்.எப். டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் மாடல் இடம்பெற்றுள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தினார். இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூ.82,710 மற்றும் ரூ.72,792 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
இந்த இரு மோட்டார் சைக்கிள்களிலும் 97.2 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், காற்றால் குளிர்விக்கப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திர கட்டுப்பாட்டு மின்னணு அமைப்பிலும், எரிபொருள் விநியோக முறையிலும் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் தொழில்நுட்பம் உயர்தர மற்றும் அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே பேசப்பட்டு வந்தது. ஆனால், ஹீரோ நிறுவனம் அதை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி பயண வாகனங்களான ஸ்பிலெண்டர் மற்றும் எச்.எப். டீலக்ஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்று எரிபொருள் பயன்பாடு வேகமாக மக்களிடம் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
எத்தனால் எரிபொருளில் ஓடும் பைக்
எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களுடன் மத்திய அரசு மாற்று எரிபொருள் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஹீரோவின் இந்த அறிமுகம் ஒரு புதிய பைக் வெளியீடாக மட்டுமல்லாமல், இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்கால திசையை காட்டும் முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.