மாருதி சுஸுகி, தன்னுடைய 'விஷன் 3.0' திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டு புத்தம் புதிய 7-சீட்டர் கார்களை களமிறக்க தயாராகி வருகிறது. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரீமியம் SUV (Y17) மற்றும் ஒரு புதிய எலக்ட்ரிக் MPV (YMC) ஆகியவை அடங்கும்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது 'விஷன் 3.0' உத்தி மூலம் சந்தையில் தனது பிடியை மீண்டும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 28 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி, 50% சந்தைப் பங்கைக் கைப்பற்றுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
26
எலக்ட்ரிக் MPV
இந்த இலக்கை அடைய, மாருதி நிறுவனம் SUV, ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, பல ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுடன், ஒரு புதிய பிரீமியம் 7-சீட்டர் SUV மற்றும் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் MPV-யை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
36
கிராட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட
மாருதியின் இந்த இரண்டு புதிய மூன்று-வரிசை மாடல்களும், நல்ல மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களை விரும்பும் குடும்பங்களைக் குறிவைத்து வெளியாகின்றன. 'Y17' என்ற குறியீட்டுப் பெயரில் வரும் புதிய 7-சீட்டர் SUV, கிராண்ட் விட்டாரா காரை அடிப்படையாகக் கொண்டது. இதன் பிளாட்ஃபார்ம், இன்ஜின், சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் என அனைத்தும் கிராண்ட் விட்டாராவில் இருந்து எடுக்கப்படவுள்ளன.
'YMC' என்ற குறியீட்டுப் பெயரில் வரும் புதிய எலக்ட்ரிக் MPV, இ-விட்டாராவின் 27P ஸ்கேட்போர்டு ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்படும். 7-சீட்டர் கிராண்ட் விட்டாரா இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாருதி YMC எலக்ட்ரிக் MPV 2026 இறுதியில் அறிமுகமாகி, 2027-ல் விற்பனைக்கு வரும்.
56
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஸ்பை ஷாட்களின்படி, 7-சீட்டர் கிராண்ட் விட்டாரா, தற்போதுள்ள 5-சீட்டர் மாடலை விட நீளமாக இருக்கும். கூடுதல் இருக்கை வரிசைக்கு இடமளிக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான டிசைன் மற்றும் அம்சங்கள் 5-சீட்டர் கிராண்ட் விட்டாராவில் இருந்து பெறப்படும். இன்ஜின் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும், கிராண்ட் விட்டாராவில் உள்ள 103 bhp பவர் கொண்ட 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 115 bhp பவர் கொண்ட 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின்களையே இந்த புதிய SUV-யிலும் மாருதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
66
காரின் ரேஞ்ச்..
மாருதி எலக்ட்ரிக் MPV (YMC) சோதனை ஓட்டத்தின்போது, அதன் வடிவமைப்பு இ-விட்டாராவால் ஈர்க்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. ஏர் இன்டேக்குகளுடன் கூடிய முன்பக்க பம்பர், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஏரோ-ஆப்டிமைஸ்டு அலாய் வீல்கள் முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன. ஆனால், இ-விட்டாராவை விட இதன் பாடி பேனல்கள் மென்மையாகத் தெரிகின்றன. பின்புறத்தில், டெயில்லேம்ப்கள் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இது எர்டிகா காரை நினைவூட்டுகிறது.
வரவிருக்கும் மாருதி YMC, இ-விட்டாராவில் உள்ள அதே 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் பெரிய அளவு மற்றும் அதிக எடை காரணமாக, நிறுவனம் கூறும் டிரைவிங் ரேஞ்ச், இ-விட்டாராவை விட சற்று மாறுபடலாம்.