இந்த செடான் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், CNG பவர்டிரெய்ன் விருப்பங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன, சிஎன்ஜி மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது. மைலேஜைப் பற்றி பேசுகையில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 25.71 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 33.73 கிமீ மைலேஜையும் தருகிறது.
மைலேஜ் மற்றும் எரிபொருள் செலவு கணக்கீடு
டிசையரில் 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 60 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உள்ளது. திருவனந்தபுரத்தில் உங்கள் மாருதி டிசையரின் பெட்ரோல் டேங்கை நிரப்ப சுமார் 4000 ரூபாய் செலவாகும். அதே நேரத்தில் உங்கள் சிஎன்ஜி டேங்கை நிரப்ப சுமார் 5280 ரூபாய் செலவாகும். டிசையர் VXI (CNG + பெட்ரோல்) மாடல் முழு டேங்குகளில் சுமார் 1,000 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், பெட்ரோல், சிஎன்ஜி விலைகள் மாநிலங்களிலும் நகரங்களிலும் மாறுபடலாம், மேலும் மைலேஜ் சாலையின் நிலை, ஓட்டும் முறை மற்றும் வாகன பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது.
700 கிமீ ரேஞ்ச், வெறும் 5 நிமிடங்கள் போதும்! EV கார்களுக்கெல்லாம் இது தான் கிங் - Hyundai Nexo FCEV