மாருதி பலேனோ 2024 மாடலுக்கு ரூ.62,100 வரை தள்ளுபடி வழங்குகிறது. 2025 பதிப்பிற்கு ரூ.55,000 வரை தள்ளுபடி உண்டு. பெட்ரோல்-எம்டி, பெட்ரோல்-ஏஎம்டி, சிஎன்ஜி உள்ளிட்ட 2025 மாடல் பலேனோவின் அனைத்து வகைகளுக்கும் சுமார் ரூ.55,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இதில் தள்ளுபடி (ரூ.15,000-20,000), பரிமாற்றம் (ரூ.15,000), ஸ்கிராப்பேஜ் (ரூ.20,000) சலுகைகள் அடங்கும். 2024 சலுகை விவரங்களில், மற்ற நெக்ஸா கார்களைப் போலவே, 2024 பலேனோ மாடல்களுக்கு ரூ.75,000 (MT), ரூ.85,000 (AMT), ரூ.65,000 (CNG) என தள்ளுபடி கிடைக்கிறது.