பழசை புதுசாக்கி சந்தையில் அறிமுகம் செய்த மாருதி: 5 டோர் ஜிம்னி கார் அறிமுகம்!

First Published Jan 12, 2023, 7:12 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவான ஆட்டோ எக்ஸ்போ கார் திருவிழா நேற்று மிக பிரமாண்டமாக தொடங்கியது.

ஆட்டோ எக்ஸ்போ - கார் திருவிழா

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவான ‘ஆட்டோ எக்ஸ்போ-மோட்டார் ஷோ’ நேற்று மிக பிரமாண்டமாக தொடங்கியது. நொய்டாவில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டோ எக்ஸ்போ திருவிழா வரும் 18 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த கார் திருவிழாவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
 

மாருதி சுசூகி

ஆட்டோ மொபைல்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கான்செப்ட் கார்கள், வணிக வாகனங்கள் (டிரக்குகள் மற்றும் பேருந்துகள்) உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை இந்த கண்காட்சியில் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்துகின்றனர். மாருதி சுசுகி (Maruti Suzuki), ஹூன்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) டொயோட்டா (Toyota), கியா (Kia), எம்.ஜி (MG) போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்னி 5 டோர்

நேற்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ கார் திருவிழாவில் மாருதி நிறுவனம் ஜிம்னி காரை 5 டோர் கொண்ட காராக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக மாருதி நிறுவனத்திற்கு இந்தியாவில் அறிமுகம் என்பதே தேவையில்லை. இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் நிறுவனமாக மாருதி திகழ்ந்தாலும், எஸ்யூவி செக்மெண்டில் மாருதி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 

மாருதி ஜிம்னி கார்

மாருதி நிறுவனம் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா காரை கொண்டு வந்திருந்தாலும், மாருதிக்கு போட்டியாக திகழும் நிறுவனங்களின் கார்கள் தான் அதிகளவில் விற்பனையைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இந்த ஆட்டோ எக்ஸ்போவின் 2 ஆம் நாளான இன்று மாருதி நிறுவனம் 2 புதுவிதமான எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமானது மாருதி ஜிம்னி கார். 

ஜிம்னி

என்னதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தாலும் அது 3 டோர் ஜிம்னி கார் தான். இந்த நிலையில் மாருதி நிறுவனம் இந்த 3 டோர் காரை 5 டோர் கொண்ட காராக மாற்றி இந்தியா மற்றும் உலக சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டுகளில் வெளியானது தான் ஜிம்னி கார். அன்றைய காலகட்டத்தில் முதல் ஆஃப் ரோடுக்கு ஏற்ற வாகனமாக ஜிம்னி இருந்தது. பல நேரங்களில் மீட்பு பணிகளில் கூட இந்த ஜிம்னி கூட பயன்படுத்தப்பட்டது. 

3 டோர் ஜிம்னி

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த கார் 4ஆம் தலைமுறை காராக வெளியிடப்பட்டது. அப்போது இந்த கார் 3 டோர் கொண்ட காராக இருந்தது.

5 டோர் ஜிம்னி

தற்போது இந்த 3 டோர் கொண்ட ஜிம்னி கார் அப்டேட் செய்யப்பட்டு 5 டோர் கொண்ட ஜிம்னி காராக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் 2590 மிமீ கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிம்னி 5 டோர்

ஜிம்னி 5 டோர் கொண்ட காரின் இன்ஜின் 1.5 லிட்டர் பிடிக்கும் அளவிற்கு கே15பி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஜிம்னி காரை கரடு முரடான சாலைகளிலும், மணல் பாங்கான பகுதிகளில் பாறைகள், மலைப்பிரதேசங்களிலும் கூட எடுத்துச் செல்லலாம்.

ஜிம்னி 5 டோர் மே மாதம் விற்பனை!

இந்த கார் 2 விதமான வேரியன்டுகளில் வருகிறது. ஸெட்டா, ஆல்ஃபா என்ற வேரியன்ட்களில் வருகிறது. இந்த இரண்டு வேரியன்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோ மெட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. ஆட்டோ எக்ஸ்போ கார் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஜிம்னி 5 டோர் கொண்ட கார் வரும் மே மாதம் தனது விற்பனையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!