Maruti S-Presso: ரூ.3.49 லட்சம் விலை, 32 கி.மீ. மைலேஜ் இருந்தும் வாங்க ஆள் இல்லை

Published : Aug 18, 2026, 07:37 PM IST

Maruti S-Presso: மாருதி சுசுகியின் எஸ்-பிரெஸ்ஸோ மாடல் விற்பனையில் 89% சரிவை சந்தித்துள்ளது. ஜூலை 2026-ல் வெறும் 100 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதிக மைலேஜ், குறைந்த விலை இருந்தபோதிலும் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

PREV
15
மாருதி எஸ்-பிரெஸ்ஸோ விற்பனை

இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகி நீண்ட காலமாக முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறைந்த விலை, நல்ல எரிபொருள் சிக்கனம் மற்றும் பரவலான சேவை மையங்கள் ஆகியவை அந்த கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால், அந்த நிறுவனத்தின் எஸ்-பிரஸ்ஸோ மாடல் தற்போது விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 2026 ஜூலை மாதத்தில் வெறும் 100 எஸ்-பிரஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 912 கார்கள் விற்பனையான நிலையில், தற்போது ஆண்டு அடிப்படையில் விற்பனை 89 சதவீதம் குறைந்துள்ளது.

25
எஸ்-பிரெஸ்ஸோ விலை

எஸ்-பிரெஸ்ஸோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.49 லட்சம். அதிகபட்சமாக ரூ.5.25 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் கிடைக்கிறது. பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புபவர்களையும், அதிக எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்ப்பவர்களையும் இலக்காகக் கொண்டே இது குறைந்துள்ளது. உயரமான தோற்றம், பெட்டி போன்ற வடிவமைப்பு, அதிக தரைத்தள உயரம் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாக உள்ளன. சிறிய அளவு காரணமாக நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டவும், நிறுத்தவும் முடியும் என்பது இதன் நடைமுறைப் பலமாக பார்க்கப்படுகிறது.

லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள்.. ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்

35
எஸ்-பிரெஸ்ஸோ அம்சங்கள்

உட்புறத்தில் வித்தியாசமான வடிவமைப்பை எஸ்-பிரஸ்ஸோ பெற்றுள்ளது. வட்ட வடிவ மையக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் 7 அங்குல தொடுதிரை தகவல்-பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிலே வசதிகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை டூயல் ஏர்பேக்குகள், வேக எச்சரிக்கை மற்றும் இருக்கை பெல்ட் நினைவூட்டல் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாடல்களில் மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு மற்றும் மேடு ஏறும் உதவி போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

45
எஸ்-பிரெஸ்ஸோ மைலேஜ்

எஞ்சினை பொறுத்தவரை, 1.0 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 66 பிஹெச்பி சக்தியையும் 89 என்எம் முறுக்குவிசையையும் வழங்குகிறது. 5 வேக கைமுறை கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகள் உள்ளன. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 24.12 முதல் 25.30 கி.மீ. வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிஎன்ஜி மாடலில் ஒரு கிலோவுக்கு 32.73 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும் என நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன.

55
விற்பனை சரிவு

ஆனால், வாடிக்கையாளர்களின் தேர்வில் விலை மற்றும் மைலேஜ் மட்டும் போதுமானதாக இல்லாமல் போயிருக்கலாம். சிறிய கார் சந்தையில் பல புதிய மாடல்கள் அதிக வசதிகள், நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் போட்டியிடுகின்றன. இதனால் எஸ்-பிரஸ்ஸோவின் தனித்துவம் முன்பைவிட குறைந்திருக்கலாம். குறிப்பாக ஜூலை 2026-ல் வெறும் 100 கார்கள் மட்டுமே விற்பனையானது, சந்தையில் இந்த மாடலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவை வெளிப்படுத்துகிறது. குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை இந்த விற்பனை சரிவு மாருதி சுசுகிக்கு உணர்த்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories