மாருதி சுசுகி டிசையர் கார், விற்பனையில் 64% வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது. மலிவு விலை, சிறந்த மைலேஜ், மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, இது செடான் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் தற்போது செடான் கார்கள் அதிகமாக விற்பனையாகவில்லை என்றாலும், ஒரு கார் மட்டும் விற்பனையில் உள்ளது கொடி கட்டி பறக்கிறது அது மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire). மலிவு விலை, சிறந்த மைலேஜ், நம்பகத்தன்மை ஆகியவை இதன் வெற்றிக்கு காரணமாக உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சேடன் மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. சிலர் இதை “அம்பாஸடர் காரின் மறுபிறவி” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
24
சிறந்த செடான் கார்
காடிவாடி தளத்தின் 2025 அக்டோபர் விற்பனை அறிக்கையின்படி, மாருதி சுசுகி டிசையர் மொத்தம் 20,791 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு அதே மாதத்தில் 12,698 யூனிட்களே விற்கப்பட்டிருந்தன. இதனால், டிசையர் கார் விற்பனையில் 64% வளர்ச்சி சாதனை படைத்துள்ளது. மேலும், 2025 அக்டோபரில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில், டிசையர் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் டாடா நெக்சான் SUV உள்ளது. ஆனால் சேடன் பிரிவில் முதலிடம் மாருதி டிசையருக்கே.
34
விலை மற்றும் மைலேஜ்
மாருதி சுசுகி டிசையர் தற்போது இந்தியாவில் ரூ.6.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட் விலை ரூ.9.31 லட்சம். குறைவான விலையிலும், சிறந்த மைலேஜும் வழங்குவது இதன் வெற்றிக்குக் காரணம். குறிப்பாக, CNG வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 33.73 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஏகானமி மற்றும் எரிபொருள் சிக்கனத்தால், இது மத்திய தர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒருகாலத்தில் ஹிந்துஸ்தான் அம்பாஸடர் கார் இந்திய சாலைகளில் செடான் கிங்காக விளங்கியது. இன்று அந்த இடத்தை மாருதி டிசையர் பிடித்திருக்கிறது. குறைந்த விலை, அதிக நம்பிக்கை, உயர் மைலேஜ் இதுவே அதன் வெற்றிக்குரிய மூலக்காரணம். இந்திய சாலைகளில் மீண்டும் செடான் பாணியை உயிர்ப்பித்த கார் என்றால், அது நிச்சயமாக மாருதி சுசுகி டிசையர் தான்.