Maruti Cars Discount: கார் வாங்க இதுதான் சரியான நேரம்! ஜூன் முதல் விலை உயர்கிறது.. இன்விக்டோ முதல் பலேனோ வரை ஜாக்பாட் ஆஃபர்!

Published : May 22, 2026, 02:06 PM IST

Maruti Suzuki: சொந்தமாகக் கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினர் பலரின் தீராத கனவு. அப்படி மாருதி கார் வாங்கத் திட்டமிட்டுள்ள உங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு அதிர்ச்சி செய்தியும், ஒரு மிகச்சிறந்த சுப செய்தியும் காத்திருக்கிறது.

PREV
16
மாருதி கார் ஜாக்பாட் ஆஃபர்

மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக ஒரு கார் வாங்க நினைத்தால், அதற்கு இதுவே மிகச்சரியான நேரம் வந்துவிட்டது. மாருதி சுசுகி நிறுவனம் வரும் ஜூன் 2026 முதல் தனது கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, டீலர்கள் தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளைக் காலி செய்ய தங்களின் பிரீமியம் நெக்ஸா (Nexa) கார்களுக்குப் பல லட்ச ரூபாய் வரை அதிரடி தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றனர். எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை பார்க்கலாம்.

26
மாருதி இக்னிஸ் (Maruti Ignis)

இந்த காரின் உற்பத்தியை மாருதி நிறுவனம் நிறுத்திவிட்டதால், மிச்சமிருக்கும் ஸ்டாக்கை விற்க டீலர்கள் இதன் அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ.50,000 வரை நேரடி தள்ளுபடி வழங்குகிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்போருக்கு இது ஒரு சூப்பர் ஆப்ஷன்.

36
மாருதி பலேனோ (Maruti Baleno)

டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் i20 கார்களுக்குப் போட்டியான இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் ரூ.40,000 தள்ளுபடி உள்ளது. ஜூன் மாதத்தில் ஏறப்போகும் ரூ.30,000 விலையையும் சேர்த்தால் உங்களுக்கு மொத்தம் ரூ.70,000 மிச்சமாகும். சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

46
மாருதி ஃபிராங்க்ஸ் (Maruti Fronx)

சாலையில் செல்லும்போதே கம்பீரமான ஸ்போர்ட்டி லுக்கைத் தரும் ஃபிராங்க்ஸ் காரின் 'டர்போ' வேரியன்ட்டுக்கு ரூ.25,000 நேரடி தள்ளுபடி (கேஷ் + ஸ்கிராப்பேஜ் போனஸ்) கிடைக்கிறது. ஜூன் மாத விலை உயர்வையும் கணக்கில் கொண்டால், இந்த காரை இப்போது வாங்கும்போது உங்களுக்கு மொத்தம் ரூ.55,000 வரை லாபம் கிடைக்கும்.

56
கிராண்ட் விட்டாரா (Grand Vitara)

நடுத்தர வர்க்கத்தின் ஆல்-டைம் ஃபேவரைட் எஸ்யூவியான இதற்குத்தான் சலுகைகள் அள்ளுகின்றன. சிக்மா வேரியன்ட்டில் நேரடியாக ரூ.1.08 லட்சம் வரை சேமிக்கலாம். ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியன்ட்டில் இந்த மாடலுக்குப் பல மாநிலங்களில் சாலை வரி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனாலேயே உங்களுக்குக் கூடுதலாக ரூ.1.85 லட்சம் வரை மிச்சமாகும்.

66
மாருதி இன்விக்டோ (Maruti Invicto)

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் மறுவடிவமான இந்த பிரீமியம் எம்பிவி (MPV) காருக்குத்தான் இப்போது சந்தையில் மிகப்பெரிய ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெனி நேரடியாக ரூ.50,000 தள்ளுபடி, ரூ.1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பழைய காரை ஸ்கிராப் செய்யும்போது ரூ.1.15 லட்சம் ஸ்கிராப்பேஜ் பலன்களையும் வழங்குகிறது. வரும் ஜூன் மாத விலை உயர்வையும் சேர்த்தால், இப்போதே இந்த காரை புக் செய்பவர்களுக்கு மொத்தமாக ரூ.2.45 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:

கார்களுக்கான தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் ஆன்-ரோடு விலைகள் நீங்கள் இருக்கும் நகரம், டீலர் மற்றும் ஸ்டாக் இருப்பைப் பொறுத்து மாறுபடலாம். இறுதி விலையை உறுதிப்படுத்த, உங்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மாருதி சுசுகி டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளவும்.

Read more Photos on
click me!

Recommended Stories