புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்கிறது மஹிந்திரா! கார் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்!

First Published | Nov 6, 2024, 9:06 AM IST

மஹிந்திரா நவம்பர் 26 ஆம் தேதி இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது. BE 6e மற்றும் XEV 9e என பெயரிடப்பட்ட இந்த எலக்ட்ரிக் SUV கார்கள் மஹிந்திராவின் நேரடி எலக்ட்ரிக் கார்கள் வரிசையில் முதல் வருகையாகும்.

Mahindra Electric Vehicles

மஹிந்திரா நவம்பர் 26 ஆம் தேதி இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது. BE 6e மற்றும் XEV 9e என பெயரிடப்பட்ட இந்த எலக்ட்ரிக் SUV கார்கள் மஹிந்திராவின் நேரடி எலக்ட்ரிக் கார்கள் வரிசையில் முதல் வருகையாகும். மஹிந்திராவின் புதிய INGLO பிளாட்ஃபார்மில் இந்த கார்கள் உருவாக்கப்படும். இந்த SUV கார்களின் கான்செப்ட் வடிவமைப்பு 2022 இல் வெளியிடப்பட்டது.

Mahindra New EVs

மஹிந்திரா XEV 9e, XUV.e9 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டது. அதன் பெரும்பாலான ஸ்டைலிங் அமைப்ப கான்செப்ட் காருடன் ஒத்துப்போகிறது. கூபே போன்ற ரூஃப்லைன், முக்கோண ஹெட்லேம்ப்கள் ஆகியவை இதில் அடங்கும்.

Tap to resize

Mahindra Electric Cars

EV இன் பின்புறம் டெயில் விளக்குகள் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கான்செப்ட் வாகனம் 4790 மிமீ நீளம், 1905 மிமீ அகலம் மற்றும் 1690 மிமீ உயரம் கொண்டது, 2775 மிமீ வீல்பேஸை வழங்குகிறது. இதே பரிமாணங்கள் தக்கவைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Mahindra BE 6e

மறுபுறம் BE 6e, BE.05 கான்செப்ட்டின் அடிப்படையில், அதிக செயல்திறன் கிராஸ்ஓவர்-வகை சில்ஹவுட்டைக் கொண்டுள்ளது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் வாகனமாக (SEV) இருக்கும் என்று கான்செப்ட் மாடலின் அறிமுகத்தின்போது மஹிந்திரா கூறியது.

Mahindra BE 6e

டீஸர் வீடியோவின் படி, BE 6e ஹூட்டின் பெரிய திறப்பு போன்ற சில சுவாரஸ்யமான வடிவமைப்பு அம்சங்கள் இருக்கும். இது ஏரோ டைனமிக் த திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. BE 6e ஸ்போர்ட்டி தோற்றமுடைய டிஆர்எல்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. பின்புறம் முழு அகல டெயில்லேம்பைப் பெற்றிருக்கும். BE 6e கான்செப்ட் கார் 4370 மிமீ நீளம், 1900 மிமீ அகலம் மற்றும் 1635 மிமீ உயரம், 2775 மிமீ வீல்பேஸ் கொண்டது.

Mahindra INGLO

டீஸர் வீடியோ புதிய கார்களின் உட்புறத்தையும் காட்டுகிறது. ஒருங்கிணைந்த இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. ஒரு ஃப்ரீஸ்டாண்டிங் பனோரமிக் டிஸ்ப்ளே இடம்பெறும். BE 6e பனோரமிக் சன்ரூஃப் கொண்டதாக இருக்கும். அறிமுகத் தேதியை நெருங்கும்போது மஹிந்திரா இந்த EV கார்கள் பற்றிய விரிவான தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். 

Latest Videos

click me!