இந்த காரின் வடிவமைப்பில் நிறுவனம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஹெட்லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ், டெயில் லைட்ஸ், மேம்படுத்தப்பட்ட பம்பர், புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய டிரிம் என பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காரின் கேபினிலும் சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. 2026 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N மாடலில், தார் Rox-ல் இருந்து பெறப்பட்ட பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், புதிய கேபின் மற்றும் இன்டீரியர் டிசைனும் இதில் இருக்கும்.