பண்டிகை காலத்துக்கு முன்பாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடையவுள்ளனர். இதன் மூலம் ரூ.20,000 முதல் ரூ.24,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தற்போது வாகன விலைகளை குறைக்கின்றனர் கொண்டே இருக்கிறார்கள். அதில் பஜாஜ் ஆட்டோவும் இணைந்துள்ளது. வரும் செப்டம்பர் 22, 2025 முதல் பஜாஜ் மற்றும் கேடிஎம் வாகனங்களின் விலை குறைந்த விலையில் கிடைக்கப்போகிறது. பண்டிகை காலத்துக்கு முன்பாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடையவுள்ளனர்.
25
கேடிஎம் பைக்
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, GST 2.0 நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே விலை குறைப்பை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ரூ.20,000 முதல் ரூ.24,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. கேடிஎம் (KTM) பைக்குகள் பஜாஜின் துணை நிறுவனமாக இருப்பதால் அதற்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும். புதிய GST விகிதங்கள் அமலுக்கு வரும் அதே நாளில் இந்த குறைந்த விலைகள் நடைமுறைக்கு வரும்.
35
ஹோண்டா ஆக்டிவா
மில்லியன் கணக்கான குடும்பங்கள் மற்றும் சிறு தொழில் வியாபாரிகள் எளிதில் வாகனங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் இந்த முடிவு எடுத்துள்ளது. "இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பது ஒரு துணிச்சலான முடிவு. இது தேவையை அதிகரித்து, தொழில் துறையை வலுப்படுத்தும்" என பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
புதிய GST விதிகளின்படி, 350cc வரை உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 28% வரி 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்ப்ளெண்டர் போன்ற பிரபல பைக்குகள் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் மாருதி ஆல்டோ, ஹூண்டாய் கிராண்ட் i10, டாடா டியாகோ போன்ற சிறிய கார்கள் சுமார் 10% வரை மலிவு ஆகும்.
55
பண்டிகை ஆஃபர்
இதனுடன், ஆட்டோ பாகங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி அமைப்பு எளிதாகிறது. சிறிய ஹைபிரிட் கார்கள் (பெட்ரோல் 1200cc வரை, டீசல் 1500cc வரை) கூட மலிவாகும். ஆனால் லக்சுரி கார்கள், பெரிய SUV-கள் மற்றும் 350cc-க்கு மேல் உள்ள பைக்குகள் இனி 40% GST-க்கு உட்பட்டுள்ளன. அதாவது, குறைந்த விலை வாகனங்களுக்கு பெரும் சலுகை கிடைக்கிறது; ஆனால் ஆடம்பர வாகனங்கள் இன்னும் அதிக வரியில் தொடர்கின்றன.