Green Company-யின் Sunny Electric Scooter, 60 கிமீ மைலேஜ் தரும் 250W மோட்டார் மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியுடன் வருகிறது. 25 கிமீ/மணி வேகம், 6 மாத உத்தரவாதம், பல நிறங்களில் கிடைக்கிறது.
மின்சார வாகனங்களில் பெரும்பாலும் மைலேஜ் குறைவு என்பது பெரிய சிக்கல் ஆகும். ஆனால் Green Company தயாரித்துள்ள Sunny Electric Scooter அந்த குறையை தீர்க்கிறது. இந்த ஸ்கூட்டரில் 250W மோட்டார் மற்றும் நிலையான ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும். 4 முதல் 6 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி என்பதால், இதற்கு ரெஜிஸ்ட்ரேஷன் அல்லது டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை.
24
மின்சார ஸ்கூட்டர் சலுகை
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததால் தினசரி ஆபீஸ் பயணம், குறுகிய தூரப் பயணங்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. ஸ்கூட்டரில் LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி நிலையை எளிதாகப் பார்க்கலாம். 10 அங்குல சக்கரங்கள், ப்னியூமாட்டிக் டயர்கள் ஆகியவை கடினமாக உள்ள சாலைகளிலும் சீராக ஓட உதவும். இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வசதியுடன், footrest கூட வழங்கப்பட்டுள்ளது. முன்னால் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் என பாதுகாப்பான பிரேக் அமைப்பு உள்ளது. இந்த EV-க்கு 6 மாதம் (180 நாட்கள்) உத்தரவாதம் கிடைக்கும். 48 மணி நேரத்திற்குள் கஸ்டமர் சர்வீஸ் வசதி உண்டு.
34
க்ரீன் கம்பெனி ஸ்கூட்டர்
பச்சை, நீலம், வெள்ளை, லைட் கிரீன், கருப்பு உள்ளிட்ட 6 நிறங்கள் உடன் இந்த ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. ஹெல்மெட் அணிந்தே பயன்படுத்துமாறு நிறுவனம் பரிந்துரைக்கிறது. இந்த ஸ்கூட்டர் அலாய் ஸ்டீல் ஃபிரேம், முன்-பின் சஸ்பென்ஷன், ஆன்டி-ஸ்லிப் கால்தள வசதி போன்ற அம்சங்களுடன் வருகிறது. greenev.life என்ற தளத்தில் புக்கிங் செய்யலாம். கூடுதலாக ரூ.799 முதல் ரூ.1,999 வரை ஸ்கிராட்ச் கார்டு சலுகைகளும் உள்ளன. ரூ.75,000 மதிப்புள்ள இந்த ஸ்கூட்டர் தற்போது சலுகை விலையில் வெறும் ரூ.28,499க்கு கிடைக்கிறது.
இஎம்ஐ வசதியும் உண்டு. இதனை நீங்கள் மாதம் ரூ.2,586 செலுத்தி வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி மூலம் ரூ.1 லட்சம் வரை கடனும் கிடைக்கும். மொபைல் எண் மட்டுமே போதுமானது.ஆவணங்கள் தேவையில்லை. இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் நிறுவன தளத்தில் இருந்து பெறப்பட்டவை மட்டுமே. எனவே வாடிக்கையாளர்கள் முழு தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.