Price Hike: கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த தகவல் உங்களுக்காக. அறிமுகமான சில வாரங்களிலேயே இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்தி வரும் கியா நிறுவனம், கேரன்ஸ் கிளாவிஸ் இவி மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே இரண்டாவது முறையாக விலை மாற்றம் செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை வேரியன்ட்களில்தான் அதிக விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25
பல்வேறு வேரியண்ட்கள், பல நிற தேர்வுகள்
கேரன்ஸ் கிளாவிஸ் இவி பல்வேறு வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த மாடல், பல நிற தேர்வுகளுடன் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் இளம் வாடிக்கையாளர்கள் முதல் குடும்ப பயனர்கள் வரை பல தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
35
செயல்திறனில் வலுவான போட்டியாளர்
இந்த மாடலில் இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்கும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவிக்கிறது. பெரிய பேட்டரி பதிப்பில் இதைவிட அதிக ரேஞ்ச் கிடைக்கிறது. அதே நேரத்தில், வேகமான செயல்திறன் மற்றும் சுறுசுறுப்பான ஓட்ட அனுபவத்தையும் இந்த இவி வழங்குகிறது.
இரட்டை டிஜிட்டல் திரைகள், குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், பரந்த சன்ரூஃப் மற்றும் உயர்தர ஒலி அமைப்பு போன்ற அம்சங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன. பாதுகாப்பிற்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
55
போட்டி அதிகம்.. ஆனால் வாய்ப்பு அதிகம்
இந்திய சந்தையில் ஏற்கனவே பல எலக்ட்ரிக் எஸ்யூவிகள் போட்டியிட்டு வரும் நிலையில், கேரன்ஸ் கிளாவிஸ் இவி தனது நீண்ட ரேஞ்ச், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமைப்பின் மூலம் தனி இடத்தை உருவாக்க முயற்சிக்கிறது. விலை உயர்வு இருந்தாலும், அந்த அம்சங்களே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணமாக இருக்கலாம்.