கிளாசிக் லெஜெண்ட்ஸ், ஜாவா 42 பைக்கிற்கு புதிய ஐவரி நிறத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, ரெட்ரோ ஸ்டைல் டிகால்கள் மற்றும் இன்ஜின் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
கிளாசிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் தனது ஜாவா 42 (Jawa 42) பைக்கிற்கு புதிய ‘Ivory’ நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நிறத்துடன், Jawa 42 மொத்தம் 15 வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய ஐவரி வேரியண்ட் விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், நியூ டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
24
கிளாசிக் லெஜெண்ட்ஸ் பைக்
இந்த அப்டேட் முழுக்க தோற்றமாக மட்டுமே உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய பாஸ்டல் ஐவரி நிறத்துடன் ரெட்ரோ ஸ்டைல் டிகால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் ‘42’ என்ற எழுத்துக்கள் தனித்துவமாக இடம்பெற்றுள்ளன.
34
ஜாவா 42 இன்ஜின் அம்சங்கள்
1960-70களின் ரேசிங் பைக்குகளை நினைவூட்டும் வகையில் டேங்கில் செக்கர்ட் ஃபிளாக் வடிவம் சேர்க்கப்பட்டுள்ளது. பைக்கின் சிலூயெட், ஆஃப்செட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் உடல் வடிவமைப்பு மாற்றமின்றி தொடர்கிறது. Jawa 42 இன் 294cc, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 27.3hp பவர் மற்றும் 26.8Nm டார்க் வழங்குகிறது.
6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. ரூ.1.59 லட்சம் முதல் தொடங்கும் இந்த மாடலில் ஐவரி நிறம் டாப்-எண்ட் வேரியண்டாக உள்ளது. புதிய நிறம் ரெட்ரோ ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.