பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்தினால் தீ விபத்து ஏற்படுமா?

First Published | Jul 29, 2024, 9:00 PM IST

பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா? செல்போன் பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதா? பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமா?

Cellphone in Petrol bunk

பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கையாக செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். அதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

Petrol Bunk precautions

பெட்ரோல் வாயுவாகும் போது மிக எளிதில் தீப்பிடிக்கக் கூடியதாக இருக்கும். இந்த வாயுக்களுக்கு சிறிய தீப்பொறி இருந்தாலும் தீ பற்றவோ வெடிக்கவோ வாய்ப்பு ஏற்படக்கூடும்.

Tap to resize

Using mobile in Petrol bunk

மொபைல் போன்களில் இருந்து பெரும்பாலும் தீப்பொறி உருவாகும் வாய்ப்பு மிக குறைவு. எனவே, மொபைல் போன் மூலம் தீ பற்றிக்கொள்ளும் சாத்தியம் மிகவும் அரிதுதான்.

Mobile burst in Petrol bunks

மின்சாரத்தை சேமித்து வைத்து இயங்கும் சாதனங்கள், அதிக வெப்பம் அல்லது அழுத்தத்தில் இருக்கும்போது வெடிக்கவோ தீப்பிடிக்கவோ வாய்ப்பு உள்ளது. இதனால் தான் பாதுகாப்பாக இருப்பதற்காக மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

Mobile user in Petrol bunk

பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கூடாது என்பதும் பாதுகாப்பு நெறிமுறைகளில் ஒரு அம்சமாக உள்ளது. இது அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய உதவுகிறது.

Petrol bunk regulations

மொபைல் போன் பயன்படுத்துவதால் தீ ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு வெளியே செல்போனைப் பயன்படுத்துவது சிறந்தது.

Latest Videos

click me!