Hyundai Electric Auto rickshaw
ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஆட்டோ
இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்து உள்ளது. இதனால் இந்தியாவில் வாகனங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதை புரிந்து வைத்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் நமது நாட்டில் போட்டி போட்டு கார், பைக், ஆட்டோ என நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை போட்டி போட்டு களமிறக்கி வருகின்றன.
இந்தியாவில் முதல் ஐந்து கார் நிறுவனங்களில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவும் ஒன்று. ஹூண்டாய் கார்களுக்கு நாட்டில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஹூண்டாய் இப்போது மூன்று சக்கர வாகனப் பிரிவில் நுழைய தயாராகி வருகிறது. ஆம்... இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி ஆட்டோக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.
Hyundai
டிவிஎஸ் நிறுவனத்துடன் ஜோடி
நமது நாட்டில் ஹிந்திரா, பஜாஜ் மற்றும் பியாஜியோ ஆகிய நிறுவனங்கள் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையில் கொடிகட்டி பறக்கின்றன. இப்போது இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனமும் மூன்று சக்கர வாகன பிரிவில் காலடி எடுத்து வைக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான மூன்று சக்கர வாகனங்கள் சிஎன்ஜி மற்றும் டீசல் வாகனங்களாக இருக்கும் நிலையில், ஹூண்டாய் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை கொண்டு வர உள்ளது. ஹூண்டாய் மூன்று சக்கர வாகனப் பிரிவில் நுழைய டிவிஎஸ் நிறுவனத்துடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கார் தான் நம்பர் 1; காட்டுக்கு ஒரே ராஜாதான் - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
Hyundai-TVS
புதிய பார்ட்னர்ஷிப்
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் புதிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தும் என தகவல்கள் உலா வருகின்றன. இந்த புதிய பார்ட்னர்ஷிப் பற்றி ஹூண்டாய் அல்லது டிவிஎஸ் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்திய மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் ஹூண்டாய் பொறியியல் மற்றும் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்றும் டி.வி.எஸ் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் எனவும் வாகன மோட்டார் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆட்டோரிக்சா பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Electric Auto rickshaw
என்னென்ன சிறப்பம்சங்கள்?
அதாவது இந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் இணைப்பு, டிஜிட்டல் திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. ஹூண்டாய்-டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஆட்டோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 170 கிமீ முதல் 180 கிமீ வரை பயணிக்கும் வகையில் இருக்கும் என்றும் இதன் விலை மாருதி ஆல்டோ காரை விட குறைவாக அதாவது ரூ.4 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹூண்டாய் இந்த மாடலை 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33 கிமீ மைலேஜ்: விற்பனை விகிதத்தில் சதம் அடித்த வேகன் ஆர்