Hyundai : மீண்டும்... மீண்டுமா! ஒரே ஆண்டில் 3வது முறையாக உயரும் ஹூண்டாய் கார்களின் விலை..!

Published : Aug 27, 2026, 06:07 PM IST

Hyundai Car Price increase Again : 2026 செப்டம்பர் முதல் ஹூண்டாய் கார்களின் விலையை 1% வரை உயர்த்தப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வுதான் முக்கிய காரணம்.

PREV
14
Hyundai Car Price increase Again

ஹூண்டாய் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. வரும் 2026 செப்டம்பர் மாதம் முதல், இந்தியாவில் உள்ள தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 1% வரை உயர்த்தப் போவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணம் என நிறுவனம் கூறியுள்ளது. உலகளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளும் நிறுவனத்தின் செலவுகளை அதிகரித்துள்ளன. இந்த கூடுதல் செலவின் சுமையை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்தாலும், தொடர்ந்து செலவுகள் ஏறுவதால், அதன் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Top SUVs Under Rs 8 Lakh: ரூ.8 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யூவி.. பிரீமியம் வசதிகள், அதிக மைலேஜ் தரும் 4 கார்கள்!

24
மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து விலை மாறும்

ஹூண்டாயின் என்ட்ரி-லெவல் மாடலான கிராண்ட் i10 நியோஸ் முதல் பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவியான அயோனிக் 5 வரை அனைத்து மாடல்களுக்கும் இந்த புதிய விலை உயர்வு பொருந்தும். தற்போது, ஹூண்டாய் கார்களின் விலை சுமார் ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.55.70 லட்சம் வரை உள்ளது. ஆனால், செப்டம்பரில் எவ்வளவு விலை உயரும் என்பது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

Hyundai : பட்ஜெட் விலையில் சீப் அண்ட் பெஸ்ட் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்!

34
2026-ல் இது மூன்றாவது விலை உயர்வு

2026-ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும். ஜனவரி 1-ம் தேதி முதல் சுமார் 0.6% வரை வாகனங்களின் விலையை நிறுவனம் உயர்த்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் மீண்டும் 1% விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இது ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அப்போது மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து கார்களின் விலை ரூ.12,800 வரை அதிகரித்தது.

இந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் வர்த்தகம் பல சவால்களை சந்தித்துள்ளது. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), நிறுவனத்தின் ஏற்றுமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் ஹூண்டாயின் சப்ளையர்களில் ஒருவரான 'மோபிஸ்' நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவை உற்பத்தியை தற்காலிகமாக பாதித்தன. இதன் தாக்கம் ஏற்றுமதியிலும் தெரிந்தது.

Hyundai Aura CNG: குறைந்த விலையில் அதிக மைலேஜ்.. பட்டையை கிளப்பும் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி.. வசதிகள் மாஸ் காட்டுது

44
19.6% குறைந்தது ஏற்றுமதி

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், ஹூண்டாய் 48,140 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 38,708 யூனிட்களாகக் குறைந்துள்ளது. இது சுமார் 19.6% சரிவாகும். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உலகப் பொருளாதார சூழலில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே செப்டம்பர் முதல் புதிய விலை உயர்வை அமல்படுத்துவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Hyundai Exter EMI: மாதம் ரூ.11,000-ல் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வாங்க முடியுமா? இஎம்ஐ, விலை இதோ

Read more Photos on
click me!

Recommended Stories