Honda WN7: ஹோண்டா தனது முதல் எலக்ட்ரிக் நேக்கட் மோட்டார்சைக்கிளான WN7-ஐ ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
ஹோண்டா WN7 மூலம் ஐரோப்பிய எலக்ட்ரிக் பைக் சந்தையில் நுழைந்துள்ளது. 2040-க்குள் கார்பன் நியூட்ரல் இலக்கை அடைய இது ஒரு முக்கிய படியாகும்.
28
ஹோண்டா ஃபன்
ஹோண்டாவின் 'ஃபன்' பிரிவில் முதல் ஃபிக்ஸட்-பேட்டரி எலக்ட்ரிக் பைக்காக WN7 உள்ளது. சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்த பயணத்தை விரும்பும் ரைடர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
38
ஹோண்டா WN7 - முக்கிய அம்சங்கள்
இதன் வடிவமைப்பு மெலிதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் உள்ளது. இது ஒரு எலக்ட்ரிக் வாகனம் என்பதை அதன் தோற்றமே எடுத்துக்காட்டுகிறது.
ஹோண்டா ரோடுசிங்க் இணைப்புடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது. இது நேவிகேஷன், அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை எளிதாக்குகிறது. இதன் மென்மையான பயணம் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
58
ஒரே சார்ஜில் 130 கிலோமீட்டர்
ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ. வரை செல்லும். CCS2 ரேபிட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம். ஹோம் சார்ஜிங்கில் 3 மணிநேரம் ஆகும்.
68
செயல்திறன்
செயல்திறனில் 600cc பைக்குக்கு சமமாகவும், டார்க்கில் 1000cc பைக்குகளுக்கு போட்டியாகவும் WN7 இருக்கும் என ஹோண்டா கூறுகிறது.
78
பெயரின் ரகசியம்
WN7 பெயரில் 'W' என்பது 'Be the Wind', 'N' என்பது 'Naked', '7' என்பது செயல்திறன் வகுப்பைக் குறிக்கிறது. இது ஹோண்டாவின் கார்பன்-நியூட்ரல் எதிர்கால நோக்கத்துடன் பொருந்துகிறது.
88
எதிர்கால திட்டங்கள்
2024-ஐ எலக்ட்ரிக் பைக் விரிவாக்கத்தின் தொடக்கமாக ஹோண்டா பார்க்கிறது. WN7 மூலம், எலக்ட்ரிக் ஃபன் பிரிவில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.