புதிய அமேஸ் (Honda Amaze Car) குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வந்திருந்தாலும், பவர்டிரெய்ன் அப்படியே உள்ளது. இருப்பினும், சிறந்த ஓட்டுநர் அனுபவத்திற்காக மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் மையத்தில் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் SOHC i-VTEC பெட்ரோல் எஞ்சின் உள்ளது, இது 90PS அதிகபட்ச ஆற்றலையும் 110Nm டார்க்கையும் உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு MT மற்றும் CVT ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும்.
2024 ஹோண்டா அமேஸ் மைலேஜ் CVT ஆப்ஷனுக்கு 19.46kmpl மற்றும் MT ஆப்ஷனுக்கு 18.65kmpl என கூறப்படுகிறது.