மலிவான விலையில் கிடைக்கும் ஆக்டிவா ஸ்கூட்டர்.. ரூ.18,887 வரை விலை குறைப்பு!

Published : Sep 12, 2025, 10:11 AM IST

புதிய ஜிஎஸ்டி வரி சலுகையால் ஹோண்டா பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை ரூ.18,887 வரை குறைந்துள்ளது. ஆக்டிவா, ஷைன், யூனிகார்ன், CB350 போன்ற பிரபல மாடல்களில் கணிசமான சேமிப்பு கிடைக்கிறது.

PREV
15
ஆக்டிவா புதிய விலை

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் ஹோண்டா பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை குறைத்துள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி சலுகையை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முடிவை ஹோண்டா எடுத்துள்ளது. இதன் மூலம் பல பிரபலமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ரூ.18,887 வரை விலை குறைவுள்ளது.

25
ஹோண்டா விலை குறைப்பு

புதிய ஜிஎஸ்டி விகிதப்படி, 350cc-க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு 28% இருந்த வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயன் ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்களான ஆக்டிவா, ஷைன் 125, யூனிகார்ன், CB350 போன்றவற்றிற்கு நேரடியாக கிடைக்கிறது. ஆனால், 350cc-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கு வரி 31% இல் இருந்து 40% ஆக உயர்த்தப்பட்டதால், அந்த மாடல்களின் விலை விரைவில் உயர வாய்ப்பு உள்ளது.

35
ஹோண்டா யூனிகார்ன் விலை

மாடல் வாரியாக பார்க்கும்போது, ஆக்டிவா 110-க்கு அதிகபட்சம் ரூ.7,874 குறைப்பு, ஆக்டிவா 125-க்கு ரூ.8,259 குறைப்பு, SP125-க்கு ரூ.8,447 குறைப்பு, யூனிகார்னுக்கு ரூ.9,948 குறைப்பு என வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேமிப்பு கிடைக்கிறது. அதேசமயம் CB350 H’ness-க்கு ரூ.18,598, CB350RS-க்கு ரூ.18,857, மற்றும் CB350 மாடலுக்கு ரூ.18,887 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

45
ஹோண்டா ஸ்கூட்டர் தள்ளுபடி

பிரபலமான ஸ்கூட்டர்களில் டியோ 110 மற்றும் 125 மாடல்களில் முறையே ரூ.7,157 மற்றும் ரூ.8,042 வரை விலை குறைவுள்ளது. SP160, ஹார்னெட் 2.0, NX200 போன்ற மாடல்களும் ரூ.10,000 முதல் ரூ.14,000 வரை விலை குறைப்பு பெற்றுள்ளன.

55
இருசக்கர வாகன ஜிஎஸ்டி குறைப்பு

இதன் மூலம் ஹோண்டா, இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக சேமிப்பில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பண்டிகை சீசனில் இந்த விலை குறைப்பு ஹோண்டாவின் விற்பனைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories