55 கி.மீ. மைலேஜ்... பட்ஜெட் ஸ்கூட்டரில் பெஸ்டு ஹோண்டா ஆக்டிவா 7G!

First Published | Nov 10, 2024, 11:10 AM IST

ஸ்டைலான தோற்றத்துடன் சக்திவாய்ந்த என்ஜினைக் கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா 7ஜி (Honda Activa 7G) மைலேஜ் ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 7ஜி (Honda Activa 7G) ஸ்கூட்டர் பெண்களை ஈர்க்கும் வசீகரமான தோற்றம் கொண்டது. பிராண்டட் அம்சங்களுடன் 55 கிமீ சிறந்த மைலேஜ் காரணமாக இந்தியச் சந்தையில் பரப்பான விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஸ்டைலான தோற்றத்துடன் சக்திவாய்ந்த என்ஜினைக் கொண்டிருக்கும் இது மைலேஜ் ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டர் அதன் ஸ்போர்ட்டி டிசைன் மூலம் உங்களை கூட்டத்திலிருந்து தனித்து நிற்கச் செய்யும். LED ஹெட்லைட்கள் மற்றும் முன்பக்கத்தில் உள்ள கோண வடிவமைப்பு ஆகியவை கவர்ச்சிகரமான தோற்றத்தை கொடுக்கும். LED டெயில்லைட்கள் மற்றும் புதிய கிராப் ரெயில் ஆகியவை பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

Tap to resize

ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரில் BS-6 இன்ஜினும் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் பற்றிய விவரங்களை ஹோண்டா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 110 CC எஞ்சின் இதிலும் கொடுக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. சிறப்பான செயல்திறன் கொண்ட இந்த எஞ்சின் லிட்டருக்கு 55 கிலோமீட்டர் மைலேஜையும் தரும்.

நவீன அம்சங்களில் கூட ஆக்டிவா 7ஜி (Activa 7G) ஸ்கூட்டர் சிறந்ததாக உள்ளளது. இதில் முழுமையான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் இருக்கும். இதில் ஸ்பீடோமீட்டர், ஃப்யூல் கேஜ், ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் போன்ற முக்கியமான தகவல்கள் கிடைக்கும். இது தவிர, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம்.

ஹோண்டா ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரின் விலை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இதன் ஆரம்ப விலை ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!