Published : Dec 06, 2024, 09:27 AM ISTUpdated : Dec 06, 2024, 11:03 AM IST
Hero Vida V2 electric scooter: ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான மாடல்களில் இது களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அனைவரும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மவுசை கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ விடா வி2 (Hero Vidஅ வ்2 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
24
electric scooter sales in india
லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான மாடல்களில் இந்த ஸ்கூட்டரை களமிறக்கியிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முக்கியமே அதன் பேட்டரிதான். ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரை பொறுத்தவரை வி2 லைட் மாடலில் 2.2kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. வெறும் 3 மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும்.
வி2 பிளஸ் மாடலில் 3.44kWh பேட்டரி பேக் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. வி2 புரோ மாடலில் 3.94kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேட்டரிகளையும் 5 முதல் 6 மணி நேரத்துக்குள் 80 சதவீதம் சார்ஜ் செய்து விட முடியும். ரேஞ்ச் மற்றும் வேகத்தை பொறுத்தவரை வி2 புரோ மாடல் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதுவும் 40 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும்.
34
electric scooter price
இந்த மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 114 கிமீ வரை பயணிக்க முடியும். வி2 பிளஸ் மாடல் மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும். வி2 லைட் மாடலை பொறுத்தவரை அதிகப்பட்சமாக மணிக்கு 69 கிமீ வேகத்தில் செல்லும். முழுமையான சார்ஜில் 64 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும்.
ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரின் அனைத்து மாடல்களிலும் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு ரெகன், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
44
electric scooter features
ஹீரோ விடா வி2 ஸ்கூட்டரின் விலையை பொறுத்தவரை அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில்தான் அமைந்துள்ளது. வி2 லைட் மாடலில் விலை வெறும் ரூ.96,000 மட்டுமே. வி2 பிளஸ் மாடலின் விலை ரூ.1.15 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வி2 புரோ மாடலின் விலை ரூ.1.35 லட்சத்தில் இருந்து தொடங்குறது.