விலை ஏறிடுச்சு.. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை உயர்வு! புதிய விலைப் பட்டியல் இதோ

Published : Nov 22, 2026, 02:39 PM IST

Hero Splendor Plus Price Hike: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடலின் பழைய மற்றும் புதிய விலை விவரங்களை பார்க்கலாம்.

PREV
15
ஸ்பிளெண்டர் பிளஸ் விலை உயர்வு

இந்தியாவின் பிரபலமான 100 சிசி இருசக்கர வாகனமான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை மாற்றம் அடிப்படை டிரம் பிரேக் மாடல் முதல் ஸ்பெஷல் எடிஷன் வரை பல மாடல்களுக்குப் பொருந்துகிறது. இதன்படி, முன்பு ரூ.77,777-க்கு விற்பனை செய்யப்பட்ட அடிப்படை மாடல் தற்போது ரூ.78,912 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.1,135 அதிகரித்துள்ளது. i3S மாடலின் விலையும் ரூ.78,910-ல் இருந்து ரூ.80,045 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலைகள் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து சாலைப் பயன்பாட்டு விலை மாறுபடும்.

25
ஸ்பெஷல் எடிஷனுக்கு ரூ.3,086 உயர்வு

இந்த விலை மாற்றத்தில் அதிகபட்ச உயர்வைப் பெற்றிருப்பது ஸ்பிளெண்டர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல்தான். முன்பு பிளாக் அண்ட் ஆக்சென்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது ஸ்பெஷல் எடிஷன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பழைய விலையான ரூ.78,580 தற்போது ரூ.81,666 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.3,086 அதிகரித்துள்ளது. 125 மில்லியன் எடிஷன் மாடலின் விலையும் ரூ.80,531-ல் இருந்து ரூ.81,666 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாடல்களின் முன்புறத்தில் டிரம் பிரேக் வசதியே வழங்கப்படுகிறது.

35
மூன்று புதிய நிறங்கள் அறிமுகம்

விலை உயர்வுடன் ஸ்பெஷல் எடிஷனில் மூன்று புதிய நிறங்களையும் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேட் கிரே, மேட் வெர்னியர் கிரே, கேண்டி பிளேசிங் ரெட் ஆகிய நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும். மற்ற மாடல்களின் நிறங்களில் தற்போது மாற்றம் இல்லை. அதேபோல், பைக்கின் இன்ஜின் அல்லது இயந்திர அமைப்பிலும் புதிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. முன்புற டிஸ்க் பிரேக் வசதி தேவைப்படுபவர்கள் XTEC மாடலைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், ஸ்பிளெண்டர் பிளஸ் வரிசையில் முன்புற டிஸ்க் பிரேக் வழங்கப்படும் ஒரே மாடல் XTEC ஆகும்.

45
XTEC, XTEC 2.0 மாடல்களின் புதிய விலை

ஸ்பிளெண்டர் பிளஸ் XTEC டிரம் பிரேக் மாடலின் விலை ரூ.82,418 ஆகவும், முன்புற டிஸ்க் பிரேக் மாடலின் விலை ரூ.85,461 ஆகவும் உள்ளது. இதில் அனலாக் மற்றும் டிஜிட்டல் இணைந்த மீட்டர், புளூடூத் வழியாக அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கை, நிகழ்நேர மைலேஜ் விவரங்கள் போன்ற வசதிகள் உள்ளன. XTEC 2.0 மாடலின் விலை ரூ.84,549. இதில் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் அபாய எச்சரிக்கை விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாடலில் முன்புற டிஸ்க் பிரேக் வசதி கிடையாது. டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்படுகிறது.

55
புதிய விலைப் பட்டியல்

எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் ஸ்பிளெண்டர் பிளஸ் Flex மாடலின் விலையும் ரூ.1,332 உயர்ந்து ரூ.84,042 ஆக மாறியுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.82,710. இந்த மாடல் E20 முதல் E85 வரையிலான எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. E85 எரிபொருளைப் பயன்படுத்தும்போது 8.6 குதிரைத்திறன் மற்றும் 8.3Nm முறுக்குவிசை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் HF Deluxe Flex மாடலின் விலை ரூ.72,792 என்ற பழைய அறிமுக விலையிலேயே தொடர்கிறது. மொத்தத்தில், ஸ்பிளெண்டர் பிளஸ் வரிசையில் அதிகபட்சமாக ரூ.3,086 வரை விலை உயர்ந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories