முதலிடத்தில் இருக்கும் கார் மஹிந்திரா XUV700
குளோபல் ncap நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 வகை கார் முதல் இடத்தை பிடித்துள்ளது. பெரியவர்களின் பாதுகாப்பை பொறுத்தவரை 16.3/17 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல குழந்தைகளின் பாதுகாப்பை பொறுத்தமட்டில் 41.66/ 49 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் ஆகிய இரு வகைகளிலும் Manual மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரு வகைகளிலும் இந்த வாகனம் விற்பனைக்கு உள்ளது. தோராயமாக 17 லட்சம் ரூபாய் துவங்கி 31 லட்சம் வரை இந்த கார்கள் விற்பனையாகி வருகின்றது.
மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து கார்களும் அதில் உள்ள வசதிகளுக்காக 5க்கு 5 மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Electric Scooter : எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.21,000 தள்ளுபடி.. சூப்பர் சலுகை - முழு விபரம் இதோ !!