30,000 க்குக் கம்மியா ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஒரே சார்ஜில் 140 கி.மீ. செல்லும் Gkon Roadies!

Published : Nov 03, 2024, 07:50 AM IST

Gkon Roadies எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் பயணம் செய்யலாம். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க, பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் கூடத் தேவையில்லை.

PREV
15
30,000 க்குக் கம்மியா ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஒரே சார்ஜில் 140 கி.மீ. செல்லும் Gkon Roadies!
Gkon Roadies Electric Scooter

குறைந்த விலையில் நீண்ட தூர பயணிக்கக்கூடிய மின்சார ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு Gkon எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சரியான தேர்வாக இருக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப் பெரிய லெட் ஆசிட் பேட்டரியுடன் வருகிறது.

25
Gkon Roadies Electric Scooter

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 12 மணிநேரம் ஆகலாம். ஆனால் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். பேட்டரிக்கு 24 மாத வாரண்டியும் வழங்கப்படுகிறது.

35
Gkon Roadies Electric Scooter

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர். குறைந்த வேகத்தில் பயணிக்கக்கூடிய ஸ்கூட்டர் என்பதால் இதை ஓட்ட லைசென்ஸ் கூடத் தேவையில்லை. இதை வாங்குபவர்கள் வாகனப் பதிவும் செய்யத் தேவையில்லை.

45
Gkon Roadies Electric Scooter

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல நல்ல அம்சங்களும் உள்ளன. கார்பன் பாடி பிரேம், இரண்டு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆன்டி ஸ்லேவ் சிஸ்டம், LED லைட்டிங் மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்றவை இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

55
Gkon Roadies Electric Scooter

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மிகவும் குறைவு. ரூ.29,000 முதல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். ஆன்லைன் மூலமாகவும் இதை ஆர்டர் செய்யலாம். குறைந்த பட்ஜெட்டில் மின்சார ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories