2023 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வகையில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகியின் புதிய eVX கார் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் எலக்ட்ரிக் எஸ்யூவியின் எடிஷனில் வெளியாகவுள்ளது. விரைவில் இந்த வண்டி இந்தியாவிலும் விற்பனைக்கு வருகின்றது. தாய் நிறுவனமான சுஸுகிக்கான உலகளாவிய தயாரிப்பாக eVXன் முக்கியத்துவத்தை இந்த விஷயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றே கூறலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட EVகளின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பகுதியாக ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த புதிய eVX ஆனது 60kWh பேட்டரியைப் பெறும், இது 500km வரை வரம்பைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது AWD அமைப்புடன் வரும் என்றும் இதற்கான விலை அறிவிப்பு மார்ச் 2025ல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.