Ferrari Electric Car: சூப்பர் கார் தயாரிப்பாளரான ஃபெராரி, தனது முதல் முழுமையான எலக்ட்ரிக் காரான 'லூஸ்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2.5 வினாடிகளில் 100 கிமீ வேகம், 530 கிமீ ரேஞ்ச் என அசத்துகிறது இந்த கார்.
சூப்பர் கார் உலகில் வேகம், ஆடம்பரம் மற்றும் பெருமையின் அடையாளமாக பார்க்கப்படும் ஃபெராரி, தற்போது ஒரு புதிய திசையை நோக்கி நகர்ந்துள்ளது. நிறுவனத்தின் முதல் முழுமையான மின்சார காரான ‘லூஸ்’ அறிமுகம், வெறும் புதிய மாடல் வெளியீடாக மட்டுமல்லாமல், அதன் எதிர்கால வாகன துறைக்கான முக்கிய அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கார், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் எரிபொருள் தொழில்நுட்பங்களை தாண்டி மின்சார உலகில் ஃபெராரியின் அதிகாரப்பூர்வ நுழைவாயில் உள்ளது.
25
லூஸ் காரின் அம்சங்கள்
பிரத்யேக மின்சார தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கார், நான்கு நான்கு சக்கரங்களுக்கும் தனித்தனி சக்தி வழங்கும் மின்மோட்டார்களுடன் வருகிறது. 800 வோல்ட் மின்சார அமைப்பு மற்றும் 122 கிலோவாட் மணிநேர பேட்டரி மூலம் மொத்தமாக 1,050 குதிரை சக்தி உருவாகும் என நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் மூலம் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டுகிறது.
35
முழு சார்ஜில் 530 கிமீ ரேஞ்ச்
வேகத்தில் மட்டுமல்ல, பயண தூரத்திலும் ‘லூஸ்’ கவனம் ஈர்க்கிறது. முழு சார்ஜில் 530 கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 கிலோவாட் அதிவேக சார்ஜிங் வசதியால், ஏற்ற சூழலில் குறுகிய நேரத்தில் அதிகளவு மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனுடன் 8 ஆண்டு வாரண்டி மற்றும் 7 ஆண்டு பராமரிப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பில், கண்ணாடி கூண்டு போன்ற தோற்றம் இந்த காருக்கு தனித்த அடையாளம் வழங்குகிறது. காரின் உள்ளமைப்பில் பாரம்பரிய பட்டன்களுக்கு பதிலாக திரை அடிப்படையிலான கட்டுப்பாடுகள், 21 ஸ்பீக்கர்கள் கொண்ட ஒலி அமைப்பு மற்றும் முழுமையான மின்னணு அனுபவம் இடம்பெற்றுள்ளது.
55
ஃபெராரி லூஸ் வசதிகள்
வினாடிக்கு 200 முறை தகவல்களை புதுப்பிக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு, சக்கர சக்தி பகிர்வு, செயலில் இயங்கும் சஸ்பென்ஷன் மற்றும் மீள்சார்ஜ் பிரேக்கிங் தொழில்நுட்பங்கள் இந்த காரை தொழில்நுட்ப ரீதியாக வேறுபடுத்துகின்றன. ஃபெராரிக்கு இது ஒரு புதிய மாடல் மட்டுமல்ல, மின்சார எதிர்காலத்திற்கான சக்திவாய்ந்த அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது.