Best Selling Electric Scooter: இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை மே 2026-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டிவிஎஸ் தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட நிலையில், பஜாஜ் சேடக்கின் விற்பனை வளர்ச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 2026-ல் மட்டும் 1.70 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 62.76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை, இந்திய நுகர்வோரின் இவி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதை வெளிப்படுத்துகிறது.
25
டிவிஎஸ் மீண்டும் முதலிடம்
மே மாத விற்பனை தரவரிசையில் டிவிஎஸ் மோட்டார் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. 42,459 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, சந்தையில் 24.87 நிறுவனம் சதவீத பங்கைக் கைப்பற்றியுள்ளது. அதாவது, இந்தியாவில் விற்பனையான ஒவ்வொரு நான்கு இவி ஸ்கூட்டர்களிலும் ஒன்றாக டிவிஎஸ் மாறியுள்ளது.
35
பஜாஜ் சேடக்கின் அதிரடி எழுச்சி
பஜாஜ் ஆட்டோவின் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனம் 39,202 யூனிட்களை விற்பனை செய்து, 73.14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது டிவிஎஸ் மற்றும் பஜாஜ் இடையேயான விற்பனை வித்தியாசம் வெறும் 3,257 யூனிட்களாக மட்டுமே உள்ளது.
ஏதர் எனர்ஜி நிறுவனம் 28,240 யூனிட்களை விற்பனை செய்து, 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா பிராண்டும் 19,067 யூனிட்களுடன் 158 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கால இவி போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
ஓலாவுக்கு பின்னடைவு
மற்ற நிறுவனங்கள் வளர்ச்சி கண்ட நிலையில், ஓலா எலக்ட்ரிக் மட்டும் சரிவை சந்தித்துள்ளது. மே 2026-ல் 15,141 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, அதன் சந்தைப் பங்கு 8.87 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய இவி சந்தை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அடுத்த மாதங்களில் தரவரிசையில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.