EV Car: மின்சார கார் வாங்கப்போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

Published : Aug 27, 2026, 07:06 PM IST

EV Car: இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக EV மீது பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் EV வாகனங்களை வாங்குவதற்கு முன் அதன் நன்மைகள் மட்டுமின்றி, சில முக்கியமான நடைமுறை விஷயங்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.

PREV
17
மின்சார கார் வாங்கப்போறீங்களா?

பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது சில EV கார்களின் ஆரம்ப விலை அதிகமாக இருக்கும். ஆனால், மின்சார செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். ஏனென்றால், EV-க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டியதில்லை. வீட்டில் சார்ஜ் செய்யும் போது, ஒரு கி.மீ. பயணத்திற்கான மின்சாரச் செலவு , பெட்ரோல் காரின் எரிபொருள் செலவைவிட குறைவாக இருக்கும்.

27
Maintenance பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

நீண்ட நேரம் பயணத்துடன் ஒப்பிடும்போது தினசரி பயணம் செய்பவர்களுக்கு EV கார் பயனுள்ளதாக இருக்கும். பெட்ரோல், டீசல் கார்களில் உள்ள இன்ஜின், ஸ்பார்க் பிளக் (spark plug), எஞ்சின் ஆயில் (Engine oil) போன்ற பல பாகங்கள் மின்சார கார்களில் இல்லாததால் வழக்கமான பராமரிப்புகள் தேவையில்லை. குறைவான moving parts இருப்பதால் பராமரிப்பு செலவு குறைய வாய்ப்புள்ளது.

37
பெட்ரோல் கார் vs மின்சார கார்

மின்சார கார்கள் உடனடியாக டார்க்கை வழங்குவதால் கார் வேகமாக இயங்கும். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் இன்ஜினில் இயங்குவதால் EV-யை விட சத்தம் மற்றும் அதிர்வு அதிகமாக இருக்கும்.

EV கார்களில் இருந்து புகை வெளியேறாததால் காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது. EV வாங்குவதற்கு முன் உங்கள் வீட்டில் பார்க்கிங் இடம், மின்சார இணைப்பு மற்றும் Home Charger பொருத்தும் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

47
ஏசி பயன்படுத்தினால் Range பாதிக்குமா?

மின்சார வாகனங்களில் தொடர்ந்து ஏசியை பயன்படுத்துவது, மலைப்பாதைகளில் பயணிப்பது, பயணிகளின் எடை மற்றும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற சூழ்நிலைகளில் பேட்டரி சார்ஜ் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், சீரான வேகத்தில் வாகனம் ஓட்டுவது மற்றும் regenerative braking-ஐ சரியாக பயன்படுத்துவது Range-ஐ மேம்படுத்த உதவுகிறது.

57
Battery Warranty முக்கியம்!

EV கார்களின் பேட்டரி காலப்போக்கில் திறனை இழக்கும். எனவே வாங்கும் முன் Battery warranty, கிலோமீட்டர் வரம்பு, warranty terms ஆகியவற்றை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பல EVகளில் 5–8 ஆண்டுகள் வரையிலான பேட்டரி warranty வழங்கப்படுகிறது.

67
Charging வசதி இருக்கிறதா?

EV கார்களை Slow/Moderate charger மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகலாம். Fast charger பயன்படுத்தினால் நேரம் குறையும். ஆனால் எந்த அளவு வேகமாக சார்ஜ் ஆகும் என்பது காரின் Battery மற்றும் charger திறனைப் பொறுத்தது.

இந்தியாவில் EV charging infrastructure தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. 2026 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 67,657 EV chargers நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

77
கார் வாங்குவது உங்கள் முடிவு

சுருக்கமாக கூறினால்,

  • பெட்ரோல் கார் = அதிக எரிபொருள் + அதிக routine maintenance
  • EV = குறைந்த charging செலவு + குறைந்த routine maintenance

உங்கள் தினசரி பயண தூரம், வீட்டில் charging வசதி, நீண்ட தூரப் பயணத் தேவை, battery warranty மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை கணக்கிட்டு கார் வாங்குவது சிறந்த முடிவாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories