காரில் டேங்க் ஃபுல் செய்வதால் எரிபொருள் வழிந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. டேங்கில் காற்றுக்கு இடம் இல்லாமல் நிரப்பினால், எரிபொருள் அழுத்தம் ஏற்பட்டு வெளியே கொட்டும். இது காரின் பாகங்களைப் பாதிப்பதுடன், தீ விபத்துக்கும் வழிவகுக்கும்.
காரில் ஊருக்கு கிளம்பினால் டேங் புல் செய்வது பெரும்பாலானோரின் வாடிக்கை. அப்படி செய்வதால் எரிபொருள் வழிந்து பெரிய விபத்து ஏற்படும் நிலை உருவாகும். வழியில் பெட்ரோல் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமே அதற்கு காரணம். ஆனால் பெரும்பாலான ஆட்டோமோபைல் நிறுவனங்களும், கார் தயாரிப்பு நிறுவனங்களும் இதை ரெக்கமண்ட் பண்ணவே மாட்டார்கள்.
27
ஆட்டோ கட்டை மீறினால் ஆபத்து
நீங்கள் எரிபொருள் நிரப்பும்போது, அந்த நாஸில் (நிரப்பும் கண்ணில்) உள்ள சென்சார் ஒரு கட்டத்தில் “ஆட்டோ கட்” ஆகும். அதாவது எரிபொருள் போதுமான அளவு டேங்கில் சென்றுவிட்டது, இனிமேல் நிரப்ப வேண்டாம் என்று அது சத்தம் சொல்லும். அதனை நாம் கண்டு கொள்ளாமல் மேலும் எரிபொருளை நிரப்புவோம். அதவாது தளும்ப தளும்ப. இதுதான் பெரிய அபாயத்தை உருவாக்கும்
37
ஏன் ஆட்டோ கட் முக்கியம்?
உள்ளே காற்றுக்கு இடம் இருக்க வேண்டும். எரிபொருள் வெப்பத்தால் விரிவடையும். அந்த இடம் இல்லாமல் நிரப்பினால், எரிபொருள் அழுத்தம் ஏற்பட்டு வெளியே கொட்டும். இதுவே Spillage என்பார்கள்.
வாடகை கார் நிறுவனங்கள் ஏன் கடுமையாக இதை பின்பற்றுகிறார்கள்?
ஏனெனில் அவர்களுக்கு காரின் நிலை, பாதுகாப்பு, காப்பீட்டு நிபந்தனைகள் அனைத்தும் முக்கியம். அதேபோல, உங்கள் காரையும் நீண்ட நாள் பராமரிக்க, இதே நடைமுறை தான் சரியானது.
77
சிறந்த முறை என்ன?
எப்போதும் டேங்க் 90% வரை நிரப்பியதும் நாஸில் ஆட்டோமேட்டிக் கட் ஆனதும் நிறுத்திவிடுங்கள். எரிபொருள் வெப்பத்தில் விரிவடையும்போது அந்த காலி இடம் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சில நிமிடங்களின் கவனம் உங்கள் காரையும், உங்கள் உயிரையும் பாதுகாக்கும். அடுத்த முறையிலிருந்து, “இன்னும் கொஞ்சம் நிரப்புங்க” என்று பம்ப் ஊழியரிடம் சொல்லாமல் ஆட்டோ கட் ஆனதும் நிறுத்தி விடுங்கள்.உங்கள் காரின் ஆரோக்கியத்திற்கு இதை மறக்காமல் பின்பற்றுங்கள்!