CNG vs Flex Fuel Cars : கம்மி செலவு; அதிக மைலேஜ்... எந்த கார் பெஸ்ட்? முழு விவரம் இதோ!

Published : Jun 20, 2026, 01:57 PM IST

CNG vs Flex Fuel : பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால், CNG கார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இப்போது எத்தனால் எரிபொருளில் இயங்கும் Flex-Fuel கார்களும் சந்தைக்கு வந்துவிட்டன.

PREV
15
CNG vs Flex Fuel comparison

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருப்பதால், மக்கள் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். தற்போதைக்கு, சந்தையில் CNG கார்கள்தான் செம ஹிட்டாக இருக்கின்றன. காரணம், ஒரு கிலோ CNG-க்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை சிறப்பான மைலேஜ் கிடைக்கிறது. ஆனால், இப்போது 'Flex-Fuel' கார்கள் பற்றிய பேச்சும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இவை எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் சிறப்பு இன்ஜின்களைக் கொண்ட கார்கள்.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், எத்தனால் கலந்த பெட்ரோலான ஃபிளெக்ஸ் எரிபொருளை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. டெல்லியில் E85 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் எத்தனால் போக்குவரத்துத் திட்டம் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

டெல்லியில் E85 எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.82.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சந்தையில் உள்ள சாதாரண E20 பெட்ரோலை விட சுமார் ரூ.20 குறைவு. இதே நேரத்தில், மாருதி சுசுகி நிறுவனம் நாட்டின் முதல் மாஸ்-மார்க்கெட் ஃபிளெக்ஸ்-ஃபியூயல் காரான 'வேகன் ஆர் ஃபிளெக்ஸ்-ஃபியூயல்' காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ஃபிளெக்ஸ்-ஃபியூயல் கார் வாங்குவது நல்லதா? CNG-யை விட இதில் மைலேஜ் அதிகமாகக் கிடைக்குமா? என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

25
எது செலவு கம்மி?

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய சந்தையில் CNG கார்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பெட்ரோல், டீசலை விட CNG விலை கணிசமாகக் குறைவாக இருப்பதால், ஒரு கிலோமீட்டருக்கான பயணச் செலவு மிகவும் குறைவாக இருக்கிறது. பெரும்பாலான CNG கார்கள் ஒரு கிலோவுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகின்றன. இதனால்தான், தினமும் அலுவலகம் செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் CNG கார்களையே முதல் தேர்வாக வைத்திருக்கிறார்கள்.

35
மைலேஜில் என்ன வித்தியாசம்?

மறுபுறம், ஃபிளெக்ஸ்-ஃபியூயல் வாகனங்கள் சாதாரண பெட்ரோலுடன், E85 அல்லது E100 போன்ற அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளிலும் இயங்கும் திறன் கொண்டவை. எத்தனால் விலை பெட்ரோலை விடக் குறைவாக இருந்தாலும், அதன் 'எனர்ஜி டென்சிட்டி' (ஆற்றல் அடர்த்தி) குறைவு. இதன் அர்த்தம், CNG அல்லது சாதாரண பெட்ரோல் கார் செல்லும் அதே தூரத்தைக் கடக்க, ஃபிளெக்ஸ்-ஃபியூயல் காருக்குச் சற்று அதிக எரிபொருள் தேவைப்படும். அதாவது, இதில் மைலேஜ் சற்றுக் குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

45
கார்களின் விலையில் எவ்வளவு வித்தியாசம்?

கார்களின் விலையைப் பார்த்தால், தற்போது CNG கார்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன, மேலும் பல மாடல்களும் உள்ளன. ஆனால், சாதாரண பெட்ரோல் மாடலை விட CNG மாடலின் விலை சுமார் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை அதிகமாக இருக்கும்.

மறுபுறம், ஃபிளெக்ஸ்-ஃபியூயல் தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதனால், இப்போதைக்கு இந்த வகை கார்களின் தேர்வுகள் குறைவாகவே உள்ளன. சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி வேகன் ஆர் ஃபிளெக்ஸ்-ஃபியூயல் காரின் உத்தேச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.24 லட்சம் என்று கூறப்படுகிறது. இது சாதாரண பெட்ரோல் மாடலை விட சுமார் ரூ.85,000 முதல் ரூ.86,000 வரை அதிகம்.

55
எந்த காரை வாங்குவது புத்திசாலித்தனம்?

பயணச் செலவு மற்றும் மைலேஜை மட்டும் கணக்கில் கொண்டால், தற்போதைய சூழ்நிலையில் CNG கார்கள்தான் அதிக லாபகரமானதாகத் தெரிகின்றன. ஆனால், ஃபிளெக்ஸ்-ஃபியூயல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், இது உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால் பயன்பாட்டை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது.

உங்கள் ஊரில் CNG பங்க் நெட்வொர்க் நன்றாக இருந்து, உங்கள் ஆண்டு ஓட்டம் (கிமீ) அதிகமாக இருந்தால், நீங்கள் தாராளமாக CNG காரைத் தேர்வு செய்யலாம். ஆனால், எதிர்காலத்தில் நாடு முழுவதும் E85 எரிபொருள் கிடைப்பது அதிகரித்து, ஃபிளெக்ஸ்-ஃபியூயல் கார்களின் விலையும் குறைந்தால், இந்தத் தொழில்நுட்பம் CNG-க்கு போட்டியாளராக உருவெடுப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Read more Photos on
click me!

Recommended Stories