26.99 கிமீ/கிகி மைலேஜ், 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் வரும் டாடா பஞ்ச் சிஎன்ஜி கார், நடுத்தர குடும்பங்களுக்கு நம்பகமான தேர்வாக விளங்குகிறது. இந்த காரை அதிக அளவிலான மக்கள் வாங்கி வருகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோசாஃப்ட் எஸ்யூவி வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள டாடா பஞ்ச், இந்திய கார் சந்தையில் தனித்த சாதனை படைத்த மாடலாக அறியப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாட்டிலேயே அதிகம் விற்பனையான காராக பஞ்ச் உருவெடுத்து வரலாறு படைத்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மாருதி சுசூகி அல்லாத ஒரு கார் இந்த சாதனையை எட்டியது இதன் சிறப்பு. 2025ல் மொத்த விற்பனையில் டாடா நெக்ஸான் முன்னிலை பெற்றாலும், பஞ்ச் தனது நிலையான ஆதரவாளர்களை இழக்கவில்லை.
25
சிஎன்ஜி பிரிவில் டாடா பஞ்ச் செய்த சாதனை
குறிப்பாக 2025 நிதியாண்டில் சிஎன்ஜி பிரிவில் டாடா பஞ்ச் அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த பஞ்ச் சிஎன்ஜி மட்டும் 71,113 யூனிட்கள் விற்பனையாகி, டாடா நிறுவனம் அதிகம் விற்கப்படும் சிஎன்ஜி காராக மாறியுள்ளது. அதே நேரத்தில் நெக்ஸான் சிஎன்ஜி, டியாகோ சிஎன்ஜி, அல்ட்ராஸ் சிஎன்ஜி போன்ற மாடல்களின் விற்பனை இதைவிட குறைவாக இருந்தது. ரூ.5.59 லட்சம் என்ற ஆரம்ப விலை காரணமாக, பஞ்ச் சிஎன்ஜி நடுத்தர குடும்பங்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.
35
டாடா பஞ்ச் மைலேஜ்
எஞ்சின் விஷயத்தில், புதிய டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேம்படுத்தப்பட்ட விருப்பங்களுடன் வருகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 PS சக்தி, 170 Nm டார்க் வழங்குகிறது. மேலும், பழைய ரெவொர்ட்டோன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி வேரியண்டும் தொடர்கின்றன. சிஎன்ஜி மாடல் 73.4 PS பவர், 103 Nm டார்க் வழங்குவதுடன், 26.99 km/kg மைலேஜ் தருகிறது.
டிசைன் மற்றும் வசதிகளில் பஞ்ச் 2026 மாடல் மேலும் நவீனமாக மாறியுள்ளது. புதிய LED DRL, அப்டேட் செய்யப்பட்ட கிரில், கனெக்டெட் LED டெயில் லாம்ப், 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புற அழகை உயர்த்துகின்றன. உள்ளகத்தில் 10.24 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.
55
டாடா பஞ்ச் பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்களில் டாடா பஞ்ச் தனது பிரிவில் முன்னணியில் உள்ளது. 6 ஏர்பேக்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதுடன், ESC, ABS, TPMS மற்றும் வலுவான பாடி ஸ்ட்ராக்சர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்த விலை, நல்ல மைலேஜ், உயர் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் டாடா பஞ்ச் சிஎன்ஜி, இந்திய எஸ்யூவி சந்தையில் நம்பகமான தேர்வாக தொடர்ந்து திகழ்கிறது.