பேமிலி ட்ரிப் போக இதுதான் பெஸ்டு ஐடியா! கம்மி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்!!

Published : Aug 26, 2024, 09:28 PM ISTUpdated : Aug 26, 2024, 09:31 PM IST

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் சில கார்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அவை நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றவை. விசாலமான வசதிகளும் கொண்டவை. அந்த வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் சில எலக்ட்ரிக் கார்களைப் பார்க்கலாம்.

PREV
15
பேமிலி ட்ரிப் போக இதுதான் பெஸ்டு ஐடியா! கம்மி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்!!
MG Comet EV

எம்ஜி காமெட் EV 230 கி.மீ ரேஞ்ச் கொடுக்கிறது. இதன் பேட்டரி 17.3 kWh
திறன் கொண்டது. ரூ.6.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கும் இந்தக் கார் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்.

25
Tata Tiago EV

டாடா டியாகோ EV 315 கி.மீ ரேஞ்ச் கொடுக்கும் எலெக்ட்ரிக் கார். 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி திறன் கொண்ட இரண்டு வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே, ரூ.7.9 லட்சம் மற்றும் ரூ.9.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்).

35
Tata Punch EV

டாடா பஞ்ச் EV இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 25 kWh மற்றும் 35 kWh
பேட்டரிகளுடன் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் கார் 315 கிமீ மற்றும் 425 கிமீ ரேஞ்ச் கொடுக்கும். இவற்றின் விலை முறையே ₹10.9 லட்சம் மற்றும் ₹12.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்).

45
Citroen eC3

சிட்ரோயன் eC3 ரூ.11.7 லட்சம் விலையில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனை செய்யப்படும் இந்த மின்சார வாகனம் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கி.மீ தூரம் ஓடக்கூடியது. இதன் பேட்டரி திறன் 29.2 kWh.

55
Tata Tigor EV

டாடா டிகோர் EV  கார் 26 kWh திறன் கொண்ட பேட்டரியில் இயங்குகிறது. ரூ.12.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு உள்ள இந்தக் கார் 315 கி.மீ. ரேஞ்ச் தரக்கூடியது.

Read more Photos on
click me!

Recommended Stories