
இந்தியாவில் கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு காப்பீடு எடுத்திருப்பது கட்டயாமாக உள்ளது. இது விபத்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறது. உங்கள் வாகனத்தில் பயணிக்கும் ஏற்படும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நிகழலாம். விபத்து ஏற்பட்ட பிறகு வாகனக் காப்பீட்டுக் கோரிக்கைகளை தாக்கல் செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதுபற்றி இத்தொகுப்பில் விரிவாக அறியலாம்.
கார், பைக் என எந்த வாகனக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும் அதற்கான செயல்முறையைப் புரிந்துகொள்வது, வாகன உரிமையாளர் கருத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.
உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். வாகனத்தை சாலையில் எடுத்துச் செல்லும் போதெல்லாம், உங்கள் கார் காப்பீட்டு நிறுவனத்தின் தொடர்பு விவரங்களை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். விபத்து ஏற்பட்டால், முதலில் இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விபத்து குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். எந்த தகவலையும் மறைக்கக்கூடாது.
அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யவும். எப்ஐஆர் அல்லது முதல் தகவல் அறிக்கை என்பது திருட்டு அல்லது அடையாளம் தெரியாத நம்பர்களால் வாகனத்தில் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதிசெய்யும். விபத்து நடந்த பகுதியில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்ஐஆர் பதிவு செய்வதை உறுதிசெய்யவும். மேலும், அந்த எஃப்ஐஆர் நகலையும் தவறாமல் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு நேர்ந்த விபத்தில் இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றால், எஃப்ஐஆர் பதிவு செய்வதை நீங்கள் தவிர்க்கலாம்.
ஆதாரத்திற்காக விபத்து நடந்த இடத்தில் படங்கள் எடுக்கவும். புகைப்படங்களும் வீடியோக்களும் உங்களுக்கு நேர்ந்த விபத்தின் ஆதாரமாக இருக்கின்றன. இன்சூரன்ஸ் கவரேஜைப் பெறும்போது, உங்கள் காப்பீட்டு வழங்குநருக்கு நிலைமையைத் தெளிவுபடுத்துவதில் இவை உதவும். உங்கள் வாகனம் மற்றும் விபத்து நடந்த இடத்தின் அனைத்து சேதங்களையும் புகைப்படம் எடுக்க வேண்டும். சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு, புகைப்படங்கள் தெளிவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இப்போது வாகன இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று க்ளைம் செய்யும் செயல்முறையைத் தொடங்கலாம். லாக்-இன் செய்து இன்சூரன்ஸ் க்ளைம் பக்கத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். பாலிசி விவரங்கள், ஓட்டுநர் உரிமம், எஃப்ஐஆர் நகல், உங்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்ற வேண்டும். கடைசியாக, க்ளைம் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
விபத்து பாதிப்பை மதிப்பீடு செய்ய ஆணைய உறுப்பினரைக் கோருங்கள். பெரும்பாலான வாகனக் காப்பீடுகள், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்யவும், இன்சூரன்ஸ் கோரிக்கையை சரிபார்க்கவும் ஒரு அதிகார உறுப்பினரை வழங்குகிறது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளைப் பொறுத்து இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த சிறிது நேரம் எடுக்கலாம்.
காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இன்சூரன்ஸ் கிளைம் அனுமதியைப் பெற்றவுடன், வாகனத்தைப் பழுதுபார்ப்பதைத் தொடரலாம். உங்கள் காப்பீட்டு நிறுவன கேரேஜ்களில் ஒன்ளில் வாகனத்தை செலவில்லாமல் பழுதுபார்த்துக்கொள்ளலாம். இல்லையெனில் வேறு எந்த கேரேஜிலிருந்தும் உங்கள் வாகனத்தைப் பழுதுபார்த்து, அதற்கு ஆகும் செலவுகளை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறலாம். இதற்கு அனைத்து செலவுகளின் பில்களையும் துல்லியமான வழங்க வேண்டும்.