ரூ.4.30 லட்சத்தில் மலிவு விலை கார்.. மாருதி ஆல்டோவுக்கு போட்டி.. இந்திய மக்கள் வெயிட்டிங்

Published : Feb 17, 2026, 08:55 AM IST

சுமார் ரூ.4.30 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் ரெனால்ட் க்விட், விரைவில் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலாக அறிமுகமாக உள்ளது. இந்த புதிய மாடல் பல அப்டேட்களுடன் மாருதி ஆல்டோவுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
ரூ.4.30 லட்சத்தில் புதிய ரெனால்ட் க்விட்

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஹாட்ச்பேக் கார்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பது ரெனால்ட் க்விட். தற்போது சுமார் ரூ.4.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த கார், விரைவில் புதிய ‘ஃபேஸ்லிப்ட்’ வடிவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மாற்றமின்றி விற்பனையாகி வந்ததால், புதிய தோற்றம் அவசியம் என வாகன ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

25
ரெனால்ட் க்விட்

சமீபத்தில் சாலையில் சோதனை ஓட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய க்விட் மாடல் பல மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. முன் மற்றும் பின்புற விளக்குகள் மூடப்பட்டிருந்ததால், லைட்டிங் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக, ரெனால்டின் புதிய கிகர் எஸ்யூவி போன்று மெல்லிய எல்இடி ஹெட்லெம்ப் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிரில் அமைப்பு வரலாம்.

35
ரெனால்ட் க்விட் அம்சங்கள்

உள்ளமைப்பிலும் சில அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சீட் ஃபேப்ரிக் மற்றும் கலர் கேம்பினேஷன் மாற்றம், பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை. அதேசமயம் ரியர் பார்க்கிங் சென்சார், பவர் விண்டோ போன்ற அடிப்படை அம்சங்கள் தொடரும்.

45
சிஎன்ஜி வேரியண்ட்

என்ஜின் விஷயத்தில் மாற்றம் இருக்காது. பழைய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 68 பிஹெச்பி சக்தியுடன் தொடரும். 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் கிடைக்கும். சிஎன்ஜி வேரியண்ட்டும் இருக்க வாய்ப்பு உள்ளது.

55
மாருதி ஆல்டோவுக்கு போட்டியாக புதிய க்விட்

இந்த புதிய க்விட் 2027 ஆம் ஆண்டுக்குள் அறிமுகமாகலாம் என தகவல். மாருதி ஆல்டோவுடன் போட்டியிடும் இந்த மாடல், குறைந்த விலை கார் பிரிவில் மீண்டும் கவனம் பெறுமா என்று காத்திருக்க வேண்டும். இந்த கார் நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories