அட அட! ரூ.40,000 தள்ளுபடியா! Ola S1X, டிவிஸ் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இதுதான் சரியான நேரம்!!

First Published | Oct 17, 2024, 11:59 AM IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு EV விற்பனை ​​தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓலாவின் Ola S1X, டிவிஸ் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.40,000 வரை கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Diwali electric scooter discounts

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை தொடர்ந்து வளர்ந்து வருவகிறது. வாங்குபவர்களை கவரும் வகையில் உற்பத்தியாளர்கள் கணிசமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறார்கள். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு EV விற்பனை ​​தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Ola S1 X Discounts

ஓலா எலெக்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் "BOSS" சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. S1 வரிசை ஸ்கூட்டர்களுக்கு கணிசமான விலைக் குறைப்புகள் உள்ளன. இந்தச் சலுகையின் கீழ், Ola S1 X 2kWh ஸ்கூட்டரை ரூ.49,999 வரை குறைவான விலைக்கு வாங்கலாம். ஆனால், இந்தச் சலுகைக்கான யூனிட்டுகள் குறைவாகவே ஸ்டாக் உள்ளன. தள்ளுபடிகள், இலவச அப்டேட், பிரத்யேக டீல்கள் உட்பட ரூ.40,000 மதிப்பிலான சலுகைகளை ஓலா அளிக்கிறது.

Tap to resize

TVS iQube Discounts

டிவிஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனமும் தனது iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகள், அக்டோபர் இறுதி வரை கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட iQube மாடல்களில் ரூ.20,000 வரை சேமிக்கலாம். 2.2 kWh வேரியண்டின் விலை ரூ.17,300 வரை குறைவாகக் கிடைக்கிறமது. 3.4 kWh வேரியண்ட் ரூ.20,000 வரை விலை குறைகிறது. இலவசமாக நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் கொடுக்கிறார்கள்.

Hero Vida and Bajaj Chetak

இந்த சலுகைகள் தவிர, ஹீரோ விடா மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற பிரபலமான மாடல்களும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கின்றன. இந்த மின்சார ஸ்கூட்டர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆஃபர்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது வங்கிச் சலுகைகளைப் பெறலாம். EMI மூலம் வாங்கும் வசதிகளும் உள்ளன.

Latest Videos

click me!