Ola Electric
முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது Ola S1 X 2KWh மின்சார ஸ்கூட்டருக்கு அறிவித்த தள்ளுபடி தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. ஓலா அறிவித்த தள்ளுபடிகள் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளால், சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் சரிந்ததாக பல்வேறு ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
Ola Electric festive discount
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தாங்கள் வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் பண்டிகை கால சலுகை என்றும் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
Ola Electric Diwali Offer
மும்பை பங்குச் சந்தைக்கு (BSE) அனுப்பிய கடிதத்தில், ஓலா எலெக்ட்ரிக் தள்ளுபடி பற்றிய விவரங்களை விளக்கியுள்ளது. பண்டிகைக் காலத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.5,000 தள்ளுபடியை வழங்குவதாக நிறுவனம் உறுதிப்படுத்தியது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, ஆனால் இந்தச் சலுகை குறிப்பிட்ட மாடலில் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
Ola Electric Scooter
"நாங்கள் Ola S1 X 2KWh இன் விலையை மாற்றவில்லை; மேலும் குறுகிய காலத்திற்கு பண்டிகை கால பிரமோஷன் சலுகையை அளிக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ரூ.5,000 பொது தள்ளுபடி வழங்குகிறோம். ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.25,000 அதிக தள்ளுபடி தருகிறோம். அதுவும் மிகக் குறைந்த ஸ்டாக்குகளுக்கு மட்டுமே" என்று ஓலா கூறியுள்ளது.
Ola S1 X 2KWh offer
Ola S1 X 2KWh மாடல் ரூ.49,999க்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) விசாரித்தபோது, சங்கத்துக்கு பதிலளித்த ஓலா நிறுவனம், ஸ்கூட்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரூ.25,000 தள்ளுபடி மூலம் விலை கணிசமாகக் குறையும். ஆனால், அது குறுகிய காலச் சலுகை, ஸ்டாக் உள்ள சில யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
Ola Rs 25,000 offer
விலை மாற்றியமைக்கப்படவில்லை என்பதற்கும் விளம்பரப்படுத்திபடி அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதற்கும் அக்டோபர் 6, 2024 தேதியிட்ட இன்வாய்ஸ் ஒன்றை ஆதாரமாக அனுப்பியுள்ளது. இத்துடன் மேலும் சில ஆவணங்களையும் ARAIக்கு ஓலா நிறுவனம் வழங்கியது.
Ola S1 X 2KWh at Rs. 49,999
பங்குச்சந்தைக்கு அளித்த பதிலில், நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றத்துக்கு, எந்த மறைமுகமான காரணமும் இல்லை என்றும் செபி (SEBI) விதிமுறைகள் அனைத்திற்கும் இணைக்கமாக தகவல்களை வெளிப்படையாக வைத்திருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.