Top 5 Automatic Cars in India: கிளட்ச் மிதிக்க தேவையில்லாத, கியர் மாற்ற தேவையில்லாத இந்தியாவின் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் கார்கள் மக்களுக்கு அத்திவாசிய ஒரு பொருளாக மாறிவிட்டது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தள்ளுபடி, இஎம்ஐ வசதி என பல்வேறு வசதிகளை கொட்டிக் கொடுப்பதால் பலரும் கார்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஆனால் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு டிராபிக் பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு வசதியாக ஐந்து ஆட்டோமேட்டிக் கார்கள் (Best Automatic Cars in India) குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். முதலில் ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் கிளட்ச் மிதிப்பதையும், கியர் மாற்றுவதையும் இந்த கார்களில் உள்ள ஒரு சிறிய கணினி தானாகவே கவனித்துக் கொள்ளும். நீங்கள் ட்ரைவ் மோடில் போட்டால் ஆக்சிலேட்டர் கொடுத்தால் கார் நகர தொடங்கும். பிரேக் பிடித்தால் வண்டி நிற்கும். கியர் மாற்ற வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. இப்போது டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் (est mileage automatic cars in Tamil) குறித்து பார்ப்போம்.
புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு மிகச்சிறந்த மாடல் இதுவாகும். இந்த காரின் சிறிய வடிவம் குறுகுறு சந்துகளில் கூட எளிதாக திரும்பவும். இந்த மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 24 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது. இதனை கையாள்வது மிக எளிது. இதன் விலை ரூ.5 லட்சம் ஆகும்.
36
டாடா டியாகோ (Tata Tiago AMT)
டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள ஹில்ஸ் ஸ்டார்ட் அசிஸ்ட் மலைப்பகுதிகளில் மேடான பகுதியில் கார் பின்னோக்கி செல்லாமல் தடுக்க உதவும். பாதுகாப்பு மற்றும் ஸ்டைல் என இரண்டையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மாடல் பொருத்தமாக இருக்கும். இதன் விலை ரூ.8.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R AGS)
இந்த கார் 'டால் பாய்' டிசைன் வசதி கொண்டது. இதனால் காரின் உள்ளே அமர்ந்து ஓட்டும்போது சாலை மிகத் தெளிவாக தெரியும். மேலும் இதனை நெருக்கடி உள்ள இடங்களில் பார்க்கிங் செய்வது மிக எளிது. அதிக இட வசதி மற்றும் பெரிய ஜன்னல்கள் போன்ற மற்ற வசதிகளும் நிறைந்துள்ளன. இந்த மாடலின் விலை 7 லட்சம் ஆகும்.
56
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS)
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் ஸ்டீயரிங் மிக இலகுவாக உள்ளதால் நகர்ப்புற டிராப்பிக்கில் ஓட்டுவது மிக எளிதாக இருக்கும். இனிமையான ஆட்டோமேட்டிக் கார் விரும்புவர்களுக்கு இது பொருத்தமான ஒன்றாகும். இந்த காரின் விலை சுமார் 8.50 லட்சம் ஆகும்.
66
டாடா பஞ்ச் (Tata Punch AMT)
டாடா பஞ்ச் நமது நாட்டில் மிகவும் பிரபலமான, அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த மாடல் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்களின் நம்பகரமான தேர்வாக இருக்கும். மோசமான சாலைகளில் அல்லது மேடு பள்ளங்களில் ஓட்ட வேண்டியவர்களுக்கு மிக சிறந்தது. இந்த மைக்ரோ எஸ்யூவி காரின் விலை 10 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இந்த மாடல் 18 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.