SUV Car : ரூ.10 லட்சத்துக்குள் சூப்பரான SUV கார் வேண்டுமா? இந்த காரை மிஸ் பண்ணாதீங்க!

Published : Jul 20, 2026, 02:12 PM IST

SUV Car : பட்ஜெட் விலையில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு காரைத் தேர்ந்தெடுப்பது பலருக்கும் சவாலான விஷயம். இந்த இடைவெளியை நிரப்பி, குறைந்த விலையில் அதிக பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களை வழங்கும் கார் மாடலாக நிசான் மேக்னைட் உருவெடுத்துள்ளது.

PREV
14
விலை மற்றும் நிதித் திட்டங்கள்

நிசான் மேக்னைட்டின் விலை இந்திய சந்தையில் ரூ.5.65 லட்சத்தில் தொடங்கி (எக்ஸ்-ஷோரூம்) ரூ.10.96 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரை வங்கிக் கடன் மூலம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு எளிய வழிகள் உள்ளன.

உதாரணமாக, காரின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு சுமார் ரூ.3.81 லட்சத்தை முன்பணமாக (Down payment) செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு 8% வட்டியில் கடன் பெற முடியும். 5 ஆண்டு கால அவகாசத்தில் சுமார் ரூ.6,000 மாதத் தவணையாகச் செலுத்தி இந்த காரை நீங்கள் சொந்தமாக்கலாம். உங்கள் முன்பணத்தை அதிகரிப்பதன் மூலம், வட்டிச் சுமையையும் மாதத் தவணையையும் மேலும் குறைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Home Loan : வீடு வாங்காமலேயே Home Loan வாங்க முடியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!

24
என்ஜின் மற்றும் மைலேஜ்

நிசான் மேக்னைட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  • பெட்ரோல்: 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் வருகிறது. இது லிட்டருக்கு சுமார் 17.9 முதல் 19.9 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.
  • சிஎன்ஜி: மைலேஜை விரும்புவோருக்கு, சிஎன்ஜி மாடல் கிலோவிற்கு 24 கி.மீ வரை மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் இது இன்னும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Extension Box பயன்படுத்துகிறீர்களா? இந்த ஒரு தவறால் வீட்டில் தீ விபத்து ஏற்படலாம்!

34
அம்சங்கள் மற்றும் வசதிகள்

குறைந்த விலை என்றாலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை இதில் நிசான் வாரி வழங்கியுள்ளது.

  • 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன்).
  • 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங்.
  • ஆம்பியண்ட் லைட்டிங், ஏர் பியூரிஃபையர் (டாப் வேரியண்ட்களில்).
  • பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்.
  • வசதியான பயணத்திற்கு 60:40 ஸ்ப்ளிட் ரியர் சீட்கள்.

இதையும் படிங்க : Washing Machine : கரண்டு பில் எதுல கம்மியா வரும்? Top Load-ஆ? Front Load-ஆ?

44
பாதுகாப்பு வசதிகள்

நிசான் மேக்னைட்டின் மிகப்பெரிய பலமே அதன் பாதுகாப்புதான். சர்வதேச பாதுகாப்பு தரவரிசையில் இது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

நீங்கள் ஒரு கச்சிதமான, பாதுகாப்பான மற்றும் அதிக மைலேஜ் தரும் எஸ்யுவியை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிசான் மேக்னைட் நிச்சயம் உங்கள் பட்ஜெட் லிஸ்டில் இருக்க வேண்டிய ஒரு கார். சரியான நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த ஸ்டைலான காரை உங்கள் குடும்பத்திற்குப் புதிய வரவாகக் கொண்டுவரலாம்.

குறிப்பு : காரின் விலை மற்றும் வட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை. ஷோரூம் மற்றும் வங்கி விதிமுறைகளை முறையாகச் சரிபார்த்து முடிவெடுக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories